Published : 03 Jun 2021 03:13 AM
Last Updated : 03 Jun 2021 03:13 AM

வேளாண் இடுபொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை

தருமபுரி மாவட்டத்தில் இடுபொருட்கள், விதை, உரம் தடையின்றி கிடைக்க வேளாண் உதவி இயக்குநர்களை அழைக் கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வசந்தரேகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த சூழலில் வேளாண் பணிகளுக்கான இடுபொருட்கள், விதை, உரம் ஆகியவை வேளாண் விரிவாக்க மையங்கள், விதை, உரம் விற்பனை செய்யும் தனியார் விற்பனை மையங்களில் தடையின்றி கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு சூழலால் வேளாண் அலுவலர்கள் விவசாயிகளை சந்தித்து வேளாண் தொழில் நுட்பங்களை விளக்கவும், மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கவும் முடியாத நிலை உள்ளது.

இருப்பினும் இதுபோன்ற விவரங்களை விவசாயிகள் அந்தந்த பகுதிக்கான வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். இதற்காக, தருமபுரி -9442235265, பென்னாகரம்-8526719919, காரிமங்கலம்-9443207571, பாலக்கோடு- 9080300345, நல்லம்பள்ளி-9443635600, அரூர்-9443573870, மொரப்பூர்-9150264477, பாப்பிரெட்டிப்பட்டி-9443081440 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அதேபோல, டிஏபி உரமானியத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. எனவே, பழைய விலைக்கே தற்போது உர விற்பனை நிலையங்களில் டிஏபி கிடைக்கும். எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உரங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் தரக்கட்டுப்பாட்டு பிரிவு வேளாண் உதவி இயக்குநரை 94435 63977 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x