மதுரை காமராஜர் பல்கலையில் சிண்டிகேட் உறுப்பினர்களாக செயல்பட 3 பேராசிரியர்களுக்கு உயர் நீதிமன்றம் தடை

மதுரை காமராஜர் பல்கலையில் சிண்டிகேட் உறுப்பினர்களாக செயல்பட 3 பேராசிரியர்களுக்கு உயர் நீதிமன்றம் தடை
Updated on
1 min read

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 3 பேராசிரியர்கள் சிண்டிகேட் உறுப்பினர்களாக செயல்பட உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த லயோனல் அந்தோணி ராஜ், உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் செல்லத்துரை துணைவேந்தராக இருந்தபோது, இணைப் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியதில் முறைகேடு நடைபெற்றது.

இந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர்அலி தலைமையில் உயர்மட்டக்குழுவை உயர் நீதிமன்றம் நியமனம் செய்தது. அவர் விசாரணை நடத்தி பதவி உயர்வு வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக அறிக்கை சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கை அடிப்படையில் முறைகேட்டில் தொடர்புடையர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணை வேந்தருக்கு சிண்டிகேட் அதிகாரம் வழங்கியது. இருப்பினும் யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், முறைகேடாக வழங்கப்பட்ட பதவி உயர்வுக்கு தடை விதிக்கவும், உயர்மட்டக்குழு இறுதி அறிக்கையில் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதிடுகையில், முறைகேடாக பதவி உயர்வு பெற்றவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள 3 பேர் சிண்டிகேட் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இதையடுத்து, பேராசிரியர்கள் சுதா , தங்கராஜ் , நாகரத்தினம் ஆகியோர் சிண்டிகேட் உறுப்பினர்களாக செயல்பட தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in