ரூ.13.88 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்கில் கைதானவருக்கு நிபந்தனை ஜாமீன்

ரூ.13.88 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்கில் கைதானவருக்கு நிபந்தனை ஜாமீன்
Updated on
1 min read

ஜிஎஸ்டி வரி ரூ.13.88 கோடி ஏய்ப்பு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நிறுவன உரிமையாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துாத்துக்குடியைச் சேர்ந்த இரு நிறுவனங்களில் மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.13.88 கோடி வரி ஏய்ப்பு நடந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நிறுவனங்களின் உரிமையாளர் கிரி ராம் கைது செய்யப்பட்டார். இவர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.இளங்கோவன் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர் ஜிஎஸ்டிக்காக வழங்க வேண்டிய பணத்தில் ரூ.1.5 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். தனது பாஸ்போர்ட்டை மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

வழக்கின் சாட்சியங்களை கலைக்கவோ, ஆவணங்களை அழிக்கவோ முயற்சிக்கக்கூடாது. ஜிஎஸ்டி விசாரணை அலுவலகத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை நேரில் ஆஜராக வேண்டும். இந்த நிபந்தனையை மீறினால் மனுதாரர் மீது புதிய வழக்கு பதிவு செய்யலாம்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in