Published : 02 Jun 2021 03:40 PM
Last Updated : 02 Jun 2021 03:40 PM

தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசு உத்தரவு

சென்னை

தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

மாற்றப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளும், அவர்கள் முன்பு வகித்த பதவிகளும் வருமாறு:

1. திருச்சி ஆயுதப்படை ஐஜி தமிழ்சந்திரன் மாற்றப்பட்டு, சென்னை தலைமையிட ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. சென்னை தமிழ்நாடு காகித ஆலை மற்றும் அச்சுத்துறை, கரூர் கண்காணிப்பு அலுவலர் நஜ்மல் ஹோடா மாற்றப்பட்டு, சேலம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. சென்னை காவலர் நலன் ஐஜி சுமித்சரண் மாற்றப்பட்டு, சென்னை ரயில்வே ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. சென்னை அமலாக்கப் பிரிவு ஐஜி செந்தாமரைக்கண்ணன் மாற்றப்பட்டு, நெல்லை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. சேலம் காவல் ஆணையர் சந்தோஷ்குமார் மாற்றப்பட்டு, வடக்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. சிபிசிஐடி ஐஜி தேன்மொழி மாற்றப்பட்டு, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
7. திருப்பூர் நகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மாற்றப்பட்டு, சென்னை சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
8. சென்னை தலைமையிட ஐஜி ஜோஷி நிர்மல்குமார் மாற்றப்பட்டு, சிபிசிஐடி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
9. அயல் பணியில் டெல்லியில் மத்திய அமைச்சரகத் துறையில் இயக்குநராகப் பதவி வகிக்கும் டிஐஜி அந்தஸ்தில் உள்ள அஸ்வின் கோட்னிஸுக்கு ஐஜியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, அவர் அதே பணியில் தொடர்கிறார்.
10. நவீனமயமாக்கல் பிரிவு ஐஜி முருகன் மாற்றப்பட்டு, ஈரோடு சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது ஏடிஜிபி அந்தஸ்திலிருந்து ஐஜி அந்தஸ்துக்கு நிலையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.


11. சென்னை சட்டம்-ஒழுங்கு (கிழக்கு மண்டல) இணை ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு ஐஜியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு மத்திய மண்டல ஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
12. சேலம் சரக டிஐஜி பிரதீப்குமாருக்கு ஐஜியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, சென்னை போக்குவரத்துக் காவல் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

13. மதுரை சரக டிஐஜி சுதாகருக்கு ஐஜியாகப் பதவி உருவாக்கப்பட்டு, மேற்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
14. தொழில்நுட்பவியல் ஐஜி சஞ்சய் குமார் நவீனமயமாக்கல் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
15. அயல் பணியில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இயக்குநராக டிஐஜி அந்தஸ்தில் செயல்படும் அமித்குமார் சிங்குக்கு ஐஜியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, அவர் அதே பணியில் தொடர்கிறார்.
16. சென்னை காவல் ஆணையரகத் தலைமையிட டிஐஜி ஏ.ஜி.பாபு மாற்றப்பட்டு, வேலூர் சரக டிஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
17. நெல்லை சரக டிஐஜி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜி பிரவீன் குமார் அபிநபு மாற்றப்பட்டு, நெல்லை சரக டிஐஜியாகத் தொடர்கிறார்.
18. சென்னை போக்குவரத்துக் காவல் (வடக்கு) இணை ஆணையர் எஜிலீராசானே மாற்றப்பட்டு, சென்னை ஆயுதப்படை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
19. சென்னை தலைமையிட டிஐஜி மகேஸ்வரி மாற்றப்பட்டு, சேலம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
20. சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குநர் ராதிகா மாற்றப்பட்டு, திருச்சி சரக டிஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.


21. கடலோரக் காவல் குழும டிஐஜி விஜயகுமாரி மாற்றப்பட்டு, திண்டுக்கல் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
22. வேலூர் சரக டிஐஜி காமினி மாற்றப்பட்டு, மதுரை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
23. தஞ்சாவூர் சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா மாற்றப்பட்டு, சென்னை சிபிசிஐடி டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
24. திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா மாற்றப்பட்டு, சென்னை தலைமையிட டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
25. காவலர் பயிற்சிக் கல்லூரி சென்னை டிஐஜி சத்யபிரியா மாற்றப்பட்டு, காஞ்சிபுரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
26. சென்னை காவல் ஆணையர் தலைமையிட இணை ஆணையர் மல்லிகா மாற்றப்பட்டு, தொழில்நுட்பவியல் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
27. காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி மாற்றப்பட்டு, சென்னை காவல் ஆணையர் தலைமையிட இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
28. திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி மாற்றப்பட்டு, கோயம்புத்தூர் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
29. சிபிஐ லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி எ.சரவணன் டிஐஜியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, அதே துறையில் அயல் பணியில் தொடர்கிறார்.
30. டெல்லி அயல் பணியில் மத்திய புலனாய்வுப் பிரிவு துணை இயக்குநராகப் பதவி வகிக்கும் சேவியர் தன்ராஜுக்கு டிஐஜியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, அதே பணியில் தொடர்கிறார்.


31. தருமபுரி மாவட்ட எஸ்பி ரமேஷ்குமாருக்கு டிஐஜியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, தஞ்சாவூர் சரக டிஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
32. டெல்லி அயல் பணியில் அமைச்சக செயலகத்தில் எஸ்.பி.யாகப் பதவி வகிக்கும் அனில்குமார் கிரிக்கு டிஐஜியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, அதே பணியில் தொடர்கிறார்.
33. தருமபுரி மாவட்ட எஸ்.பி.பிரவேஷ் குமாருக்கு டிஐஜியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு தஞ்சாவூர் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
34. உணவுப்பொருள் வழங்கல் தடுப்புப் பிரிவு (மதுரை மண்டலம்) எஸ்.பி.பிரபாகரனுக்கு டிஐஜியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை விரிவாக்கத் துறை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்
35. திருவாரூர் மாவட்ட எஸ்.பி. கயல்விழிக்கு டிஐஜியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, திருச்சி ஆயுதப்படை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
36. கடலோரக் காவல் குழும (நாகப்பட்டினம்) எஸ்.பி. சின்னசாமிக்கு டிஐஜியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, அதே பொறுப்பில் தொடர்கிறார்.
37. சென்னை தொழில்நுட்பவியல் டிஐஜி ராஜேந்திரன் மாற்றப்பட்டு, கிழக்கு சென்னை கிழக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
38. கோயம்புத்தூர் சரக டிஐஜி நரேந்திரன் நாயர் சென்னை (தெற்கு) சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
39. சமூக நலன் மற்றும் மனித உரிமை ஆணைய டிஐஜி லலித லட்சுமி மாற்றப்பட்டு, சென்னை போக்குவரத்து காவல் (வடக்கு) இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
40. திருப்பூர் மாவட்ட எஸ்.பி. திஷா மிட்டல் மாற்றப்பட்டு, மயிலாப்பூர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.


41. மதுரை நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் சிவபிரசாத் மாற்றப்பட்டு, வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
42. ஸ்ரீபெரும்புதூர் சப் டிவிஷன் ஏஎஸ்பி கார்த்திகேயனுக்கு எஸ்.பி.யாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
43. சேரன்மாதேவி சப் டிவிஷன் ஏஎஸ்பி பிரதீப்புக்கு எஸ்.பி.யாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, சென்னை போக்குவரத்து (வடக்கு) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
44. சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி. குமார் மாற்றப்பட்டு, சென்னை போக்குவரத்து காவல் (தெற்கு) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
45. செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் மாற்றப்பட்டு, மாதவரம் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
46. சேலம் எஸ்.பி. தீபா கனிகர் மாற்றப்பட்டு, சென்னை அண்ணாநகர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
47. ஆவடி டிஎஸ்பி 5-வது பட்டாலியன் கமாண்டண்ட் மஹேந்திரன் மாற்றப்பட்டு, சென்னை காவல் ஆணையரக நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
48. அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு எஸ்.பி. ராமர் மாற்றப்பட்டு, சென்னை காவல் கட்டுப்பாட்டறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
49. புதுக்கோட்டை எஸ்.பி. பாலாஜி சரவணன் மாற்றப்பட்டு, சென்னை காவல் ஆணையரக தலைமையிடத் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகரன் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x