

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கடந்தவாரம் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதிக்குச் சென்றிருந்தாராம். அமைச்சர் கலந்துகொள்ளும் விழா என்றபோதும் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் ரகுபதியின் பெயரோ படமோ இல்லையாம். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரகுபதி அங்கிருந்த அதிகாரிகளை அழைத்து, “ஆட்சி மாறிடுச்சு... நீங்கள் இன்னும் மாறலையா?” என்று கடிந்து கொண்டாராம். அத்துடன், “இன்னும் இந்த அதிகாரிகள் எல்லாம் விஜயபாஸ்கருக்குத்தான் விசுவாசமா இருக்காங்க” என்று உடன்வந்த உடன்பிறப்புகளிடம் சொல்லி உச்சுக் கொட்டினாராம்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்