Published : 02 Jun 2021 03:14 AM
Last Updated : 02 Jun 2021 03:14 AM

கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்கம்: 900-க்கும் மேற்பட்டோர் சென்னை சென்றனர்

மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று காலை புறப்பட்டு சென்ற வைகை எக்ஸ்பிரஸ். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

மதுரை

ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த மதுரை- சென்னை பகல் நேர வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது.

கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலானதால் ரயில் பயணிகள் வருகை குறைந் தது. இதன் காரணமாக, தென் மாவட்டத்தில் இருந்து சென்னை மற்றும் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

மதுரையில் இருந்து சென் னைக்கு இயக்கப்பட்ட தேஜஸ் ரயிலும் ஜூன் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரை-சென்னை பகல்நேர ரயிலான வைகை எக்ஸ்பிரஸ் பயணிகள் வருகை குறைவால் சில நாட்களுக்கு முன்பு நிறுத்தப் பட்டது. இதனால், பேருந்து போக்குவரத்து இன்றி மதுரையில் இருந்து மருத்துவம் உட்பட சில அவசரத் தேவைக்கென செல்லும் மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர். இதையடுத்து மீண் டும் வைகை எக்ஸ்பிரஸை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தர விட்டது. இதன்படி, நேற்று காலை மதுரையில் இருந்து 8 மணிக்கு புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர்சாதனப் பெட்டியி லுள்ள 243 இருக்கைகளில் 46 பயணிகளும், இரண்டாம் வகுப்புப் பெட்டிகளில் மொத்தமுள்ள 1,704 இருக்கைகளில் 896 பேரும் பயணித்தனர். தொடர்ந்து இந்த ரயில் இயக்கப்படும் என அதி காரிகள் தெரிவித்தனர்.

பாண்டியன், முத்துநகர், ஆனந்தபுரி, பொதிகை, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்களும், பல்லவன் ரயிலும் வழக்கம் போல் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. இதில் எவ்வித மாற்றமும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x