Published : 02 Jun 2021 03:15 AM
Last Updated : 02 Jun 2021 03:15 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லை: சுகாதார துறையினர் தகவல்

தி.மலை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால், மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் தடை ஏற்பட்டுள்ளது என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி அவசியம் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. இதையடுத்து, நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. இதற்காக, மாவட்டங்கள் வாரி யாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதையடுத்து, தி.மலை மாவட் டத்திலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர் களுக்கு முக்கியத் துவம் கொடுக்கப்பட்டு தடுப்பூசி செலுத் தப்பட்டது. அதன் பிறகு மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மருத்துவர்கள் உள்ளிட்டோர் தடுப்பூசியை செலுத்திக் கொண் டாலும், தடுப்பூசி மீதான அச்சம் மக்களுக்கு தொடர்ந்தது. இதனால், தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் சுகாதாரத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆனாலும், தடுப்பூசி மீதான அச்சத்தில் இருந்து மக்கள் விடுபடவில்லை.

இந்நிலையில் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிறகு கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. கரோனாவின் 2-வது அலை மிக தீவிரமாக பரவியது. முதல் அலையில் காய்ச்சல் அறிகுறி தென்பட்ட நிலையில், 2-வது அலையில் ஆக்சிஜன் குறைந்து சுவாசப் பிரச்சினையை ஏற்படுத் தியது. இதனால், நாடு முழுவதும் உயிர்ச்சேதம் அதிகரித்தது.

இதைத்தொடர்ந்து, கரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசியே மிகப் பெரிய ஆயுதம் என மக்களிடம் தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறையினர் எடுத்துரைத்தனர். மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி என்ற விதி களை தளர்த்தி, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் 18 முதல் 44 வயது உள்ளவர்களுக்கும் தடுப்பூசியை செலுத்தலாம் என மத்திய அரசு அடுத்தடுத்து அறிவித்தது.

இதன் எதிரொலியாக, தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் எண் ணிக்கை திடீரென அதிகரிக்க தொடங்கியது. இதனால் தடுப் பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, உற்பத்தியை அதிகரிக்க செய்து மாநில அரசுகளுக்கு தடுப்பூசியை தவணை முறையில் மத்திய அரசு வழங்கி வந்தது. இதைத்தொடர்ந்து, 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட வர்களுக்கு, தி.மலை மாவட்டத்தில் கடந்த 24-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்காக, சுமார் 110 முகாம்கள் அமைக் கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. தடுப்பூசியின் எண் ணிக்கை குறைந்ததால், முகாம் களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டன. இதனால் நேற்று செயல் பட்ட முகாம்களில் மக்கள் கூட்டம்அதிகம் இருந்தது. இதற்கிடையில், தி.மலை மாவட்டத்தில் தடுப்பூசிகள் நேற்றுடன் இருப்பு இல்லை என சுகாதாரத் துறையினர் தெரிவித் துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை 1.47 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவற்காக பெறப்பட்ட 37 ஆயிரம் டோஸ்களும் நேற்றுடன் முடிவடைந்தது. தற்போது இருப்பு இல்லை. நாளை(இன்று) முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடை பெறுவது கடினம்.

தடுப்பூசி மீண்டும் வந்தால்தான், மக்களுக்கு செலுத்த முடியும். இன்று (நேற்று) இரவுக்குள் தடுப்பூசி கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x