

டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வு மூலம் 813 கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத்தேர்வு பிப்ரவரி 28-ம் தேதி நடைபெற இருக்கிறது.
தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் வசதிக்காக ஒருநாள் இலவச வழிகாட்டு பயிற்சி முகாம் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் ஐஏஎஸ் அகாடமியில் 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் தேர்வுமுறை, தயார் செய்வது உள்ளிட்ட ஆலோசனை களை அனுபவமிக்க பேராசிரியர் கள் வழங்குவர்.
இதில் கலந்துகொள்ள விரும்பு வோர் 99406-38537 என்ற செல் போன் எண்ணில் பெயரை முன் பதிவுசெய்துகொள்ளுமாறு பெரியார் ஐஏஎஸ் அகாடமியின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மு.ராஜேஸ் குமார் தெரிவித் துள்ளார்.