Published : 01 Jun 2021 01:09 PM
Last Updated : 01 Jun 2021 01:09 PM

லாரி தொழிலில் இருப்பவர்களுக்கு நிவாரணம் வழங்குக: மத்திய, மாநில அரசுகளுக்கு தினகரன் வலியுறுத்தல்

தினகரன்: கோப்புப்படம்

சென்னை

லாரி தொழிலில் இருப்பவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணங்களை அளித்திட முன்வர வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை கடந்த சில தினங்களாகப் படிப்படியாகக் குறைந்துவருகிறது. நேற்று (மே 31) தமிழகத்தில் 27,936 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சென்னையில் 2,596 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 478 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 3,01,781 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 31,223 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதனிடையே, தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா நிவாரணமாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது. அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை, நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், லாரி தொழிலில் இருப்பவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூன் 01) தன் ட்விட்டர் பக்கத்தில், "கரோனாவின் தாக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் லாரி தொழிலில் இருப்பவர்களுக்குரிய நிவாரணங்களை மத்திய, மாநில அரசுகள் அளித்திட முன்வர வேண்டும்.

ஏற்கெனவே கடுமையான டீசல் விலை உயர்வு, டோல்கேட் கட்டணம், காப்பீட்டுத் தொகை அதிகரிப்பு ஆகியவற்றால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் லாரி தொழிலின் நிலை, இப்போது இன்னும் மோசமாகி இருக்கிறது.

நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் இத்தொழிலைக் கவனிக்காமல் விடுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்வார்களா?" எனப் பதிவிட்டுள்ளார்.

— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 1, 2021

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x