

கிள்ளியூர் ராஜேஷ்குமாரா, விளவங்கோடு விஜயதரணியா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் செல்வப்பெருந்தகையை சட்டமன்றக் கட்சி தலைவராக அறிவித்துவிட்டது காங்கிரஸ் தலைமை. இதன் பின்னணியில் காங்கிரஸ் கட்சியில் உள்ள பட்டியலினத்து பொறுப்பாளர்களின் கூட்டு கைங்கர்யம் இருக்கிறதாம். காங்கிரஸ் கட்சியின் எஸ்சி - எஸ்டி அணியின் மாநில தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகைக்கு அந்த அணியின் அகில இந்திய தலைவராக இருக்கும் மிதுன் ராவத்தின் பரிபூரண ஆதரவு உண்டாம். அவருடன் மல்லிகார்ஜுன கார்கேயும் கைகோத்து செல்வப்பெருந்தகைக்காக களத்தில் இறங்கினார்களாம். எல்லாவற்றுக்கும் மேலாக, ராகுல் காந்தியின் உதவியாளரான கே.ராஜு பட்டியலினத்தைச் சேர்ந்தவராம். அவரது சப்போர்ட்டும் இந்த நியமனத்தில் இருந்ததாம். இத்தனை பேர் கூட்டாகச் செயல்பட்டதால் தான் கே.எஸ்.அழகிரியின் விருப்பத்தைக்கூட புறந்தள்ளிவிட்டு செல்வப்பெருந்தகையை காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி தலைவராக அறிவித்தார்களாம்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்