

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சியால் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர் களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று கூறியதாவது:
வெப்பச்சலனம் மற்றும் உள் தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஜூன் 1-ம் தேதி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்ன லுடன் கூடிய கனமழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங் களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
2-ம் தேதி சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்ன லுடன் கூடிய கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யும்.
3 மற்றும் 4-ம் தேதிகளில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப் பேட்டை, வேலூர், திருவண்ணா மலை, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங் களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங் கள் மற்றும் புதுச்சேரி, காரைக் கால் பகுதிகளில் ஒருசில இடங் களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
தமிழகத்தில் அடுத்த 2 நாட் களுக்கு மதுரை, திருச்சி, கிருஷ்ண கிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள் ளூர், சென்னை, கடலூர், புதுச்சேரி, காஞ்சிபுரம், செங்கல் பட்டு, விழுப்புரம் மற்றும் திரு வண்ணாமலை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக் கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரியை ஒட்டி பதிவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரையில் 106 டிகிரி வெயில்
இதனிடையே, தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை மற்றும் மதுரை விமான நிலையத்தில் நேற்று 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. திருத்தணியில் 105 டிகிரி, திருச்சியில் 104, சென்னை மீனம்பாக்கத்தில் 103, நுங்கம்பாக்கம், கரூர் பரமத்தி, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 102, அதிராமபட்டினம், பரங் கிப்பேட்டை, புதுச்சேரி ஆகிய இடங்களில் தலா 101, வேலூர், தருமபுரி ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.