

பாஜக சிறுபான்மையினர் அணிதேசிய செயலாளராக வேலூர்சையது இப்ராகிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜக சிறுபான்மையினர் அணிக்கு தேசிய அளவில் 6 துணைத் தலைவர்கள், 3 பொதுச்செயலாளர்கள், 7 செயலாளர்கள், பொருளாளர் என்று நிர்வாகிகளை சிறுபான்மை அணியின் தேசியத் தலைவர் ஜமால் சித்திக்நேற்று அறிவித்தார். அதில், தேசிய செயலாளராக வேலூரை சேர்ந்த சையது இப்ராகிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் என்ற அமைப்பை நடத்தி வரும் சையது இப்ராகிம், கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். பேரவை தேர்தலில் தீவிர பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.