Published : 26 Dec 2015 10:38 AM
Last Updated : 26 Dec 2015 10:38 AM

உண்மையான மகிழ்ச்சியை அன்பு ஒன்றே வழங்கும்: எழுத்தாளர் மதிஒளி கருத்து

எழுத்தாளர் மதிஒளி எழுதிய ’புத்தகமா இது?’ நூல் வெளியீட்டு விழா நேற்று மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடைபெற்றது.

விழாவில் ஏற்புரையாற்றிய நூலாசிரியர் மதிஒளி பேசியதாவது:

நான் இயங்குவதற்கு உந்து சக்தியாக இருப்பவர்கள் எப்போ தும் மனிதர்கள்தான். நான் எழுது வதற்கும், சமூக செயல்பாடுகளில் ஆர்வமாய் ஈடுபடுவதற்கும் அன் பான மனிதர்களே முதல் காரணம். மழைவெள்ளம் தமிழகம் இது வரை காணாத வரலாறு. அந்த வெள்ளம் தந்த துன்பத்திலிருந்து இப்போதுதான் மெல்ல மீண்டு வந்திருக்கின்றோம். அது தந்த வலி இன்னும் இருக்கிறது. அந்த சோகத்திலிருந்து மீண்டு எழு வதற்கு பல ஆதரவுக் கரங்கள் ஒன்றாய் சேர்ந்து நின்று உதவியிருக்கின்றன.

பொய்யை விட உண்மை எப் போதும் 2 மடங்கு மகிழ்ச்சி தரக் கூடியது. இறைவனை நாம் நினைத்தால் நமது துயரம் நிச்சயம் விலகிவிடும். உங்களின் தூய மனங்களில் இறைவன் இருக்கின்றான். அன்பு ஒன்றே என்றைக்கும் உண்மையான மகிழ்ச்சியை வழங்கக் கூடியது.

இவ்வாறு அவர் பேசினார்.

நூலை ஆடிட்டர் சி.ஏ.டி.ஆர். ராமநாதன் வெளியிட, ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி பெற்றுக் கொண்டார். விழாவில், கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் துணைத் தலைவர் ஏ.வி.ஜெயராமன், வானதி பதிப்பக உரிமையாளர் ராமநாதன், புஷ்பகலா ராமகிருஷ்ணன், விஜய் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x