

திருவண்ணாமலை நகரில் சூரியன் உதிக்கும் திசையில் அமைந்துள்ள பகுதியில் தடையின்றி நடைபெறும் சாராய விற்பனையை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தி.மலை நகரில் ‘சூரியன் உதிக்கும் திசை’யில் அமைந்துள் ளது ஒரு பகுதி. காவல் நிலையம், வருவாய்த் துறையின் அலுவலகங்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் விடுதிகள் அருகா மையில் உள்ளது. அங்குள்ள நடமாட்டத்தை அரசு இயந்திரம் மூலம் எளிதாக கண்காணித்து விடலாம். நடந்து செல்லும் தொலைவில் உள்ளது. கண்ணுக்கு எட்டிய தொலைவில் இருக்கும் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தவறிய தால், அந்த பகுதியில் சாராயம் விற்பனை அமோகமாக நடை பெறுகிறது. இதனால், நகரின் மையப் பகுதியில் சட்டம் -ஒழுங்கு பாதிக்கப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறும்போது, “ஆன்மிக பூமியான திருவண்ணாமலை நகரின் அமைதியை சாராய விற்பனை மூலம் சீர்குலைக்கப்படுகிறது. நகரம் மற்றும் நகர் பகுதியை யொட்டி அமைந்துள்ள சில கிராமங்களில் சாராயம் விற்பனை நடைபெறுகிறது. அதில் ஒரு பகுதிதான், சூரியன் உதிக்கும் திசையில் அமைந்துள்ள பகுதியாகும். மிகப்பெரிய பகுதியான இங்கே காவல் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளன. அப்படியிருந்தும், மிக தைரியமாக சாராய விற்பனை நடைபெறுகிறது. இதற்கு காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள் துணை போகி றது. சாராயம் விற்பனை செய்பவர் களுக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டப்படுகிறது.
வெளி மாவட்டங்களில் இருந்து கடத்தி வந்து, தடையின்றி சாரா யம் விற்பனை செய்கின்றனர். அதனை, தி.மலை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ளவர்கள் வாங்கி குடிக்கின்றனர். டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்பட் டுள்ளதால், 24 மணி நேரமும்சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது. சாராயம் குடிப்ப வர்களால், பெண்கள் உள்ளிட்ட பாதசாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். மேலும், அந்த பகுதி அருகே அமைந்துள்ள பிரபல மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகளும் அவதிப்படுகின்றனர்.
அதேபோல் விடுதியில் தங்கும் (தற்போது கரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ளது) மாணவ, மாணவிகளுக்கு ஆபத்தாக அமைந்துவிடுகிறது. சாராயம் விற்பனை மூலம் கோஷ்டி மோதல் ஏற்படுகிறது. இதனால், சட்டம்- ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சாராயம் விற்பனையை இரும்பு கரம் கொண்டு காவல்துறையினர் ஒடுக்க வேண்டும்” என்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பணிபுரியும் நடுநிலையானவர்கள் கூறும் போது, “சாராயம் விற்பனை நடை பெறுவது அதிகாரிகளுக்கு தெரியும். அவர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்தால் சாராயம் விற்ப னையை தடுக்கலாம்” என்றனர்.