வேலூர் மலையில் கண்டெடுக்கப்பட்ட ஆங்கிலேயர் காலத்து பீரங்கி

வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் உள்ள மலை கோட்டையில் மண்ணில் புதைந்திருந்த பீரங்கி.
வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் உள்ள மலை கோட்டையில் மண்ணில் புதைந்திருந்த பீரங்கி.
Updated on
1 min read

வேலூர்: வேலூர் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆங்கிலேயர் காலத்து பீரங்கியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

வேலூர் நகரின் கிழக்கே உள்ள மலை உச்சியில் உள்ள கோட்டை ஒன்று பாழடைந்த நிலையில் உள்ளது. இந்தக் கோட்டை 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் வேலூர் நகரை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் கண்காணிப்பு கோட்டையாக பயன்படுத்தி வந்துள்ளனர். மராட்டியர்கள் ஆட்சியில் பலப்படுத்தப்பட்ட இந்த கோட்டை ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்திலும் பாதுகாத்து வந்துள்ளனர்.

நாளடைவில் பயன்படுத்தாத இந்த பாழடைந்த கோட்டைக்கு பொதுமக்கள் சிலர் அவ்வப்போது சென்று வருகின்றனர்.

இந்நிலையில், கோட்டைக்கு அருகேயுள்ள ராணி குளம் என்ற பகுதிக்கு சற்று தொலைவில் மண்ணில் புதைந்த நிலையில் பீரங்கி ஒன்றை பொதுமக்கள் சிலர் பார்த்துள்ளனர். மழையின் காரணமாக ஏற்பட்ட மண் அரிப்பில் வெளியே தெரிந்த பீரங்கியை சிலர் தோண்டியுள்ளனர். அதில், முழுமையான பெரிய பீரங்கி ஒன்று இருப்பது தெரியவந்தது. இந்த தகவலால் சுற்றுப் பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் பீரங்கியை பார்த்துச் சென்றனர்.

இந்த பீரங்கி கண்கெடுக்கப்பட்ட இடம் வனத்துறைக்குச் சொந்தமான இடம் என்று கூறப்படுகிறது. எனவே, அந்த பீரங்கியை அங்கேயே பாதுகாப்பாக வைப்பதா? அல்லது கீழே கொண்டு வரப்பட்டு அருங்காட்சியகம் வசம் ஒப்படைப்பதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வேலூர் கோட்டையை ஆங்கிலேயர்கள் பிடித்த போது வேலூர் பகுதியை பாதுகாக்க இந்த கோட்டை மலையில் இருந்தபடி கண்காணிக்கவும் பாதுகாப்பு அரணுக்காக பீரங்கியை எடுத்துச் சென்று பயன்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in