

மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசிக்கான உதவி எண் மூலம் முன்பதிவு செய்தால் தடுப்பூசி போட வேண்டிய தேதி மற்றும் நேரம் குறுஞ்செய்தி (எம்எஸ்எஸஅ) அனுப்பி வைக்கப்படும் திட்டம் வரும் 2ம் தேதி (ஜூன் 2) முதல் தொடங்குகிறது. இது தமிழகத்திலேயே முதல் முறையாக தொடங்கப்படுகிறது.
இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேலு கூறியதாவது:
அரசு ராஜாஜி மருத்துவமனையில் சார்பில் மாநகராட்சி இளங்கோவன் மேல்நிலைப்பள்ளியில் கரோனா தடுப்பு மையம் நடத்தப்படுகிறது. இந்த மையத்தில் இன்று வரை 18 வயதிற்கு மேல் உள்ள 72 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தினசரி 1,500க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையும், கோவிட் ப்ரீ மதுரை என்ற அமைப்பும் இணைந்து பொதுமக்கள் கரோனா தடுப்பூசி போடுவதற்காக உதவி எண் மூலம் முன்பதிவு செய்யும் சேவையை வரும் 2ம் தேதி முதல் அறிமுகப்படுத்த உள்ளது.
இதன் மூலம் 18 முதல் 44 வயதினரும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களும் 7823995550 என்ற உதவி எண்ணிற்கு காலை 9 மணி முதல் மாலை 4 ணி வரை தொடர்பு கொண்ட கோவிஷீல்டு, கோவேக்சின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தவணைக்கான தேதி மற்றும் நேரத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்த பிறகு அழைப்பு பெறப்பட்ட அலைபேசி எண்ணிற்கு தடுப்பூசி போட வேண்டிய தேதி மற்றும் நேரம் குறித்து குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பப்படும்.
குறுஞ்செய்தியில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் மதுரை இளங்கோ பள்ளியில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு வந்து குறுஞ்செய்தியினை காட்டி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.