

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் 4 பேருக்குக் கருப்புப் பூஞ்சை அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனாவை போன்று கருப்புப் பூஞ்சை தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இத்தொற்று கரோனாவால் பாதிக்கப்பட்டோர், எதிர்ப்பு சக்தி குறைவானவர்களை தாக்குகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் சிலதினங்களுக்கு முன்பு, 4 பேருக்கு கருப்பு பூஞ்சைக்கான அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இதில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது தெரியவந்தது. இதில் ஒருவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி கூறுகையில், ‘‘ சிவகங்கை மாவட்டத்தில் 4 பேருக்கு கருப்பு பூஞ்சை அறிகுறி உள்ளது. மேலும் இந்நோய் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ வசதிகள் உள்ளன,’’ என்று கூறினார்.