தேனியில் தடுப்பூசி மையத்தில் நெரிசல்: கரோனா பரவும் அபாயம்

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி மையத்தில் சமூக இடைவெளியின்றி பலரும் நின்றதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி மையத்தில் சமூக இடைவெளியின்றி பலரும் நின்றதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
Updated on
1 min read

தேனி மாவட்டம் பெரியகுளம் கரோனா தடுப்பூசி மையத்தில் சமூக இடைவெளி பின்பற்றப்படாததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது

தேனி மாவட்டத்தில் 18 முதல் 44 வயதானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி போடி,ஆண்டிபட்டி, கம்பம் உள்ளிட்ட 25 இடங்களில் இதற்காக பணி நடந்தது.

பெரியகுளத்தைப் பொறுத்தளவில் அரசு மருத்துவனை, தோட்டக்கலைக் கல்லூரி, தனியார் மில், உழவர்சந்தை அருகே தனியார் மண்டபம் ஆகிய இடங்களில் இம்முகாம் நடந்தது.

அ்தன்படி காலை 9.30 மணிக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. ஏராளமானோர் வந்ததால் நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை ஒழுங்குபடுத்தாததால் பலரும் சமூக இடைவெளியை பின்பற்றாததுடன் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது.

மேலும் முகக்கவசத்தையும் பலர் உரிய முறையில் அணியவில்லை. எனவே தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக அரசு மருத்துவமனை, தனியார் மண்டபத்தில் நடந்த முகாமில் இது போன்ற நிலை ஏற்பட்டது.

இது குறித்து தடுப்பூசி போட வந்தவர்கள் கூறுகையில், அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகளின் உறவினர்கள் என்று பலரும் வரிசையில் நிற்காமல் உள்ளே செல்கின்றனர். இதனால் நாங்கள் பல மணிநேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. டோக்கன் கொடுத்து முறைப்படுத்த வேண்டும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in