

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை விட்டு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானைக்குப் போய்விட்டாலும் காரைக்குடி தொகுதியை தனது கட்டுக்குள் வைத்திருக்க நினைக்கிறாராம் முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி. இதனால் அடிக்கடி, தனது மகனும் திருவாடானை எம்எல்ஏ-வுமான கருமாணிக்கத்தை அழைத்துக் கொண்டு தேவகோட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்துவிடுகிறாராம். ஆனால், அவர் மீண்டும் காரைக்குடி தொகுதிக்குள் அரசியல் செய்ய வருவதை கார்த்தி சிதம்பரம் தரப்பு விரும்பவில்லையாம். ராமசாமிக்கு செக் வைக்கும் விதமாக தேவகோட்டை நகர, வட்டார பொறுப்பாளர்களை மாற்றும் முனைப்பில் இருக்கிறாராம் கார்த்தி. இதனிடையே, மே 21-ம் தேதி ராஜீவ் நினைவு நாளுக்கு தேவகோட்டை காங்கிரஸ் அலுவலகத்தில் அஞ்சலிக் கூட்டம் நடத்தினார் ராமசாமி. கார்த்தி ஆதரவாளர்களோ இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தியாகிகள் பூங்கா அருகே தனியாக அஞ்சலி கூட்டம் நடத்தி ராமசாமி தரப்புக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்கள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்