2017 முதல் 3 ஆண்டுகள் புதுப்பிக்க தவறியவர்கள் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க 3 மாதம் அவகாசம்: தமிழக அரசு உத்தரவு

2017 முதல் 3 ஆண்டுகள் புதுப்பிக்க தவறியவர்கள் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க 3 மாதம் அவகாசம்: தமிழக அரசு உத்தரவு
Updated on
1 min read

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை கடந்த 2017 முதல் 2019-ம் ஆண்டுவரை புதுப்பிக்கத் தவறியவர்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள 3 மாதம் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு துறைசெயலர் ஆர்.கிர்லோஷ் குமார்வெளியிட்டுள்ள அரசாணை:

2017 முதல் 2019 வரையிலான காலத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகைவழங்கலாம் என வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநர், அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளார். அதை அரசு ஆய்வு செய்து தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் (மாநில வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம்) கடந்த 2017 ஜனவரி 1 முதல் 2019 டிசம்பர் 31 வரை வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் இந்த அரசாணை வெளியான நாளில் (மே 28) இருந்து 3 மாதங்களுக்குள் (ஆகஸ்ட் 27-ம்தேதிக்குள்) ஆன்லைன் மூலம்பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.3 மாதங்களுக்கு பிறகு பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். 1.1.2017-க்கு முன்பு புதுப்பிக்கத் தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாது. இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விடுபட்ட பதிவுதார்கள் www.tnvelaivaaippu.gov.in/Empower என்ற இணையதளத்தில் தங்கள் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை குறிப்பிட்டு பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in