

சென்னையில் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட பல்வேறு பகுதிகளில் சிம்ஸ் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாம்களில் 5 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றனர்.
இது தொடர்பாக சிம்ஸ் வெளி யிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம் நூறு ஆண்டு காணாத வெள்ளப் பாதிப்பை சந்தித்துள் ளது. இதனால் பல்லாயிரக்கணக் கானோர் வீடுகளை, உடைமை களை இழந்துள்ளனர். பலர் தண்ணீரால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு உணவு, குடிநீர் கிடைக்கவில்லை.
எனவே எஸ்.ஆர்.எம். குழும தலைவர் ரவி பச்சமுத்துவின் அறி வுரைப்படி வடபழனி சிம்ஸ் மருத்துவமனை சார்பில் சைதாப் பேட்டை, ஜாபர்கான்பேட்டை, அண்ணாநகர், மதுரவாயல், ரயில் நகர், கன்னிகாபுரம், செனாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட் டன. கடந்த 4-ம் தேதிமுதல் நடத்தப்பட்டு வரும் இம்முகாம் களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களும் இலவச மாக வழங்கப்பட்டன.
மேலும் பாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன. இந்த சேவை மேலும் சில வாரங் களுக்கு தொடரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.