

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு உள்ளிட்ட சென்னை மழை வெள்ள பாதிப்புக்கான காரணம் குறித்து அறிய உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டுமென கொமதேக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:
மழை நீர் மட்டுமல்லாது செம்பரம் பாக்கம் ஏரியிலிருந்த நீர் திடீரென நடுஇரவில் அடையாறு ஆற்றில் திறந்து விடப்பட்டதால்தான் சென்னை மாநகர பகுதிகள் வெள் ளக்காடானது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து படிப்படியாக நீர் திறக்கப்படாமல், திடீரென திறந்துவிடப்பட்டது குறித்து பொதுப்பணித்துறை சார்பில் இது வரை தகுந்த விளக்கம் அளிக்கப் படவில்லை.
செம்பரம்பாக்கம் ஏரியை திறப் பதில் ஏற்பட்ட குழப்பம்தான், கோடிக்கணக்கான ரூபாய் சொத்து கள் இழப்புக்கும், உயிரிழப்புக்கும் காரணமாக அமைந்துள்ளது.
எனவே, மவுலிவாக்கம் கட்டிட விபத்துக்கு விசாரணைக்குழு அமைக்கப்பட்டதுபோல, சென்னை வெள்ள பாதிப்புக்கான காரணம் குறித்து அறிய பதவியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.