கோவளம் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம்: மூத்த குடிமக்கள் தொடங்கிவைத்தனர்

கோவளம் கிராமத்தில் கரோனா தடுப்பூசி முகாமை மூத்த குடிமக்கள் தொடங்கி வைத்தனர்.
கோவளம் கிராமத்தில் கரோனா தடுப்பூசி முகாமை மூத்த குடிமக்கள் தொடங்கி வைத்தனர்.
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் கோவளம் ஊராட்சியில் ‘எஸ்டீஎஸ் அறக்கட்டளை மற்றும் ஸ்கோப் நண்பர்கள் குழு’ சார்பில் அவசரகால சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சேவை மையத்தில் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை போனில் தொடர்புகொண்டு பெறும் வகையில் 9042117888, 9710923888, 7305265488 ஆகிய தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதைத் தடுப்பதற்காக இச்சேவையை தொடங்கியிருப்பதாக, அறக்கட்டளையின் நிறுவனர் சுந்தரம் தெரிவித்தார்.

இந்நிலையில், கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள கிராம மக்களை ஊக்கப்படுத்துவதற்காக ‘கோவிட் இல்லாத கோவளம்’ என்ற தலைப்பில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நேற்று கோவளத்தில் நடைபெற்றது. இந்த முகாமை அப்பகுதியைச் சேர்ந்த 2 முதியவர்கள் இணைந்து தொடங்கி வைத்தனர். இம்முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

கோவளம் ஊராட்சியில் வசிக்கும்மேற்கண்ட வயதுக்கு உட்பட்ட நபர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில், முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் பல்வேறு பரிசுகள் ஒவ்வொரு வாரமும் வழங்கப்படும் என மேற்கண்ட அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in