

நெடுஞ்சாலைத்துறை வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கண் காணிப்பு பொறியாளர் தலைமை யில் 4 சிறப்புக் குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன. இப்பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்து 850 சாலைப் பணியாளர்கள், 70 சாலை ஆய்வாளர்கள் என மொத்தம் 920 பணியாளர்கள் அழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
4 மாவட்டங்களிலும் ஏற்பட்ட 58 சாலைத் துண்டிப்புகள் சீரமைக் கப்பட்டுள்ளன. 588 சிறு பள்ளங்கள் தற்காலிக போக்குவரத்துக்கு ஏற்றவாறு சீரமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்குப் பருவ மழை முடிந்தவுடன் நிரந்தர சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். கொடைக்கானல்-பழநி சாலையில் நேற்று காலை 3 இடங்களில் ஏற்பட்ட நிலச் சரிவுகள் உடனடியாக சீரமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில்..
சென்னை மாநகரச் சாலையில் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள 6 சுரங்கப் பாதைகள், 14 நடை சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.