Published : 31 May 2021 03:14 AM
Last Updated : 31 May 2021 03:14 AM
தளர்வுகளில்லாத முழு ஊரடங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உணவின்றி தவிக்கும் குரங்கு களுக்கு சமூக ஆர்வலர்கள் உணவளித்து வருவது நெகிழ்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வம்பன், மருத்துவக் கல்லூரி, சித்தன்னவாசல் உள்ளிட்ட இடங்களில் குரங்குகள் அதிகளவில் உள்ளன. இந்த குரங்குகளுக்கு அவ்வழியே செல்வோர் பழ வகைகள், பிஸ்கட் போன்ற உணவு பொருட்களை வழங்குவது வழக்கம். ஆனால், தற்போது கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளர்வு களில்லாத முழு ஊரடங்கு அம லில் உள்ளதால், அவசர தேவைக ளைத் தவிர இதர வாகன போக்கு வரத்து முற்றிலுமாக நிறுத்தப் பட்டுள்ளது.
இதனால், தொடர்ந்து சில நாட்களுக்கு உணவுகள் கிடைக் காமல் குறிப்பிட்ட எண்ணிக் கையிலான குரங்குகள் அதே இடத்தில் இருந்தாலும், பெரும் பாலான குரங்குகள் இடம்பெயரத் தொடங்கின.
மேலும், சாலையில் அரிதாக செல்லும் வாகனங்களையும் உணவுக்காக இடைமறித்து வந்தன.
இந்நிலையில், மருத்துவக் கல்லூரி அருகே சாலையோரம் உள்ள குரங்குகளுக்கு உணவு அளிக்கும் வகையில் அதே இடத்தில் தண்ணீர் ஊற்ற ஒரு தொட்டியும், பழம்போன்ற உணவு பொருட்களை வைப்பதற்கு இரண்டு தொட்டிகளும் புதுக் கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அண்மை யில் கட்டப்பட்டன.
இந்த தொட்டிகளில் தேவைக்கு ஏற்ப அந்த அமைப்பினருடன், சமூக ஆர்வலர்களும் உணவு பொருட்களை வைத்து செல்கின் றனர். இவற்றை அங்குள்ள குரங்கு கள் உண்டு பசியாறி வருகின்றன.
இதேபோன்று, மக்கள் நட மாட்டம் இல்லாதிருக்கும் சித்தன் னவாசல் சுற்றுலா தலத்தில் உள்ள குரங்குகளுக்கு தேவைக்கு ஏற்ப அன்னவாசல் காவல் நிலையத் தினர் மற்றும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் பழம், தண்ணீர் வழங்கி வருகின்றனர்.
ஊரடங்கு சமயத்தில் பசியால் வாடும் குரங்குகளுக்கு சமூக ஆர்வலர்கள் உணவளித்து வருவது நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT