தொடர் மின்தடையால் இருளில் மூழ்கியது சென்னை: ஏடிஎம் சேவை முடங்கியதால் மக்கள் தவிப்பு

தொடர் மின்தடையால் இருளில் மூழ்கியது சென்னை: ஏடிஎம் சேவை முடங்கியதால் மக்கள் தவிப்பு
Updated on
1 min read

சென்னை முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.

நகரின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று பிற்பகலில் இருந்தே பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டன. துணை மின்நிலையங்களிலும் வெள்ளம் சூழ்ந்ததால் துண்டிப்பும் ஏற்பட்டன.

இதனால் வேளச்சேரி, மடிப்பாக்கம், நங்கநல்லூர், கிண்டி, நந்தம்பாக்கம், ராமபுரம், போரூர், வடபழனி, கோட்டூர்புரம் மற்றும் மற்றும் புறநகர் பகுதிகள் இருளில் மூழ்கின. இதன் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கின.

குறிப்பாக, தங்கள் உறவினர்கள், நண்பர்கள், அலுவலகங்களை செல்பேசியில் தொடர்புகொள்ள முடியாத நிலையால் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை முழுவதுமே ஏடிஎம் சேவை முற்றிலும் முடங்கின. இதனால், மக்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றன.

நகரின் முக்கிய இடங்களில் பெட்ரோல் பங்க்-குகள் செயல்பட முடியாத நிலையில் இருப்பதால், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை மட்டுமின்றி, அதன் புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களின் பெரும்பாலன பகுதிகளிலும் இதே நிலைதான் என்பதால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in