Published : 30 May 2021 03:11 AM
Last Updated : 30 May 2021 03:11 AM

ஜூன் 7-ம் தேதி வரை தளர்வில்லா முழு ஊரடங்கு நீட்டிப்பு- ரயில், விமான நிலையங்களுக்கு செல்ல இ-பதிவு கட்டாயம்

தமிழகத்தில் கரோனா முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டு, பல்வேறு தொழில்களும் முடங்கியுள்ளன. இதனால், தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக குடும்பத்துடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த வடமாநிலத்தவர்கள்.படம்: ம.பிரபு

சென்னை

தமிழகத்தில் ஜூன் 7-ம் தேதி வரை மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வில்லா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில், விமான நிலையங்கள் செல்லவும், அங்கிருந்து வீட்டுக்கு வரவும் இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமலான முழு ஊரடங்கை ஜூன் 7 வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த ஊரடங்கு காலத்தில் சில செயல்பாடுகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளும், சிலவற்றுக்கு தளர்வுகளும் அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசாணையில் கூறியிருப்ப தாவது:

l ஆங்கில, நாட்டு மருந்தகங்கள், கால்நடை மருந்தகங்கள், செல்ல பிராணிகளுக்கான தீவன விற்பனையகங்கள் இயங்கலாம்.

l பால், குடிநீர் மற்றும் நாளிதழ்கள் விநி யோகிக்கலாம்.

l வாகனங்கள், தள்ளுவண்டிகளில் காய்கறி, பழம் மற்றும் மளிகைப்பொருட்களும் அனு மதியுடன் விற்பனை செய்யலாம். ஆன் லைன் அல்லது தொலைபேசி வாயிலாக மளிகை பொருட்கள் ஆர்டர் பெற்று அவற்றை காலை 7 முதல் மாலை 6 மணி வரை வீடுகளில் வழங்க அனுமதியுண்டு.

l நியாயவிலைக் கடைகள் காலை 8 முதல் பகல் 12 மணிவரை இயங்கலாம்.

l பெட்ரோல், டீசல் பங்க்குகள், சமையல் எரிவாயு விநியோகத்துக்கு அனுமதி யுண்டு.

l காலை 6-10, பகல் 12-3, மாலை 6-9 மணி என மூன்று வேளையும் உணவகங்களில் பார்சல் சேவைக்கு அனுமதியுண்டு. இந்த நேரங்களில் உணவு விநியோக நிறுவனங்கள் இயங்கலாம்.

l மின்-வணிக நிறுவனங்கள் காலை 8 முதல் மாலை 6 மணிவரை இயங்கலாம்.

l ரயில்வே, விமானம், கப்பல் துறைமுக இயக்கம் அனுமதிக்கப்படுகிறது.

l மின்சாரம், குடிநீர், சுகாதாரப் பணிகள், தொலை தொடர்பு, தபால் சேவைகள் அனுமதிக்கப்படுகின்றன.

l பத்திரிகை ஊடகங்கள் பணிபுரிய அனுமதி யுண்டு.

l அத்தியாவசிய சேவைகளுக்கான தலை மைச் செலகம், மருத்துவம், வருவாய் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் இயங்க அனுமதியுண்டு.

l ரத்த வங்கி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த சேவைகள் இயங்க அனுமதியுண்டு.

l அவசர பயணங்களுக்கான விசா வழங்கும் மையங்கள் குறைந்த அளவு பணியாளர் களுடன் இயங்கலாம். அந்த பணியாளர் கள் நிறுவன அடையாள அட்டையுடன் பயணிக்க அனுமதியுண்டு.

l கண்காணிப்பு இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்களில் பணியாற்றுவோர் உரிய அடையாள அட்டை அல்லது இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

l வேளாண்மை மற்றும் அது சார்ந்த பணி கள், விவசாய பொருட்கள், இடுபொருட்கள் போக்குவரத்துக்கு அனுமதியுண்டு.

l கால்நடை, கோழிப்பண்ணைகள் உள்ளிட்ட பண்ணைகள் இயங்க அனுமதியுண்டு.

l குளிர்பதன கிடங்குகள், கிடங்குகள் உள்ளிட்டவற்றுக்கான சரக்கு கையாளும் சேவைகளும், துறைமுகங்கள், விமானம் மற்றும் ரயில் நிலையங்கள், கண்டெய்னர் மையங்கள் தொடர்பான சேவைகளுக்கு அனுமதியுண்டு.

l வீட்டில் இருந்து விமான நிலையம், ரயில் நிலையம் செல்வதற்கும், அங்கிருந்து வீட்டுக்கு வருவதற்கும் பயணம், பயணச்சீட்டு மற்றும் அடையாள அட்டையுடன் கூடிய இ-பதிவு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும்.

l அத்தியாவசிய பொருட்கள் தயாரிப்பு, தொடர் இயக்க தொழிற்சாலைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக ஏற்றுமதி நிறுவனங் கள் தங்கள் ஏற்றுமதி ஆர்டர்களை மேற்கொள்ளும் வகையில், 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக் கப்படுகிறது. அதே நேரம், கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் அனுமதியில்லை.

l தொழிற்சாலைகள் ஒரு மாதத்துக்குள் தங்களது பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

l கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங் களில், அங்கு தங்கியிருந்து பணியாற்று வோர் அனுமதிக்கப்படுகின்றனர்.

l தன்னார்வலர்கள், சிறப்பு தேவைகள் உள்ளோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு உணவு மற்றும் இதர பொருட்கள் கொண்டு செல்வோர் உரிய இ-பதிவு அடிப்படையில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

l மாநிலங்களுக்குள்ளும், மாவட்டங்களுக் கிடையிலும், மாவட்டத்துக்குள்ளும் தனிநபர்கள் மருத்துவ அவசரங்கள் மற்றும் இறப்பு, இறுதிச்சடங்குக்கு செல்வதற்கு இ-பதிவு அவசியம். அதே போல் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மூலம் வருவோர் இ-பதிவு மூலம் கண்காணிக்கப்படுகின்றனர்.

l நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில் எவ்வித தளர்வுகளும் கிடையாது.

l கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நட வடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x