Published : 30 May 2021 03:12 AM
Last Updated : 30 May 2021 03:12 AM

சேலம் மாவட்டத்தில் கூடுதலாக 68 மருத்துவர்கள்; 130 செவிலியர்கள் நியமனம்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சேலம்

சேலம் மாவட்டத்தில் புதிதாக 68 மருத்துவர்கள் மற்றும் 130 செவிலியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சேலம் இரும்பாலையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைவசதிகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக நோயாளிகள் நேற்று முன்தினம் முதல் அனுமதிக்கப்பட்டு வருகின்ற னர். இம்மையத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சேலம் இரும்பாலை கரோனாசிகிச்சை மையத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் என்னென்ன கட்டமைப்பு களுடன் உருவாக்கப் படுமோ அந்த வசதிகளுடன் இங்கு உருவாக்கப் பட்டுள்ளது.

வடமாநிலங்களில் 30 நாட்கள் உருவாக்கப்பட்ட இத்தகைய கட்டமைப்புகள், முதல்வர் உத்தரவின்படி 12 நாட்களில் அமைக்கப் பட்டுள்ளது. இங்கு கூடுதலாக 500 படுக்கை வசதிகள் கொண்ட மையத்தை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விரைவில் அப்பணியும் நிறைவடையும்.சேலம் மாவட்டத்தில் ஏற்கெனவே 6 ஆயிரம் படுக்கைகள் இருந்த நிலையில், கூடுதலாக 5,500 படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் 68 மருத்துவர்கள், 130 செவிலியர்கள் புதிதாக பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இரும்பாலை சிறப்பு சிகிச்சை மையத்தில் தலா 50 சதவீதம் புதிய மருத்துவர்கள் மற்றும் புதிய செவிலியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி 28.39 லட்சம் பேருக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 12 சதவீதம் பேர் தடுப்பூசிபோட்டுள்ளனர். 60 ஆயிரம் பேருக்கு செலுத்தும் வகையில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தற்போது இருப்பு உள்ளது.

தொற்றினால் பாதிக்கப் படுவோர்களை கண்டறிந்து, அவர் களுக்கு உடனுக்குடன் சிகிச்சை வழங்க மாவட்டம் முழுவதும் 32 மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, 32 சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்களின் கட்டுப்பாட்டில் ஏற்கெனவே 11 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் 177 குழுக்கள் அமைக்கப்பட்டு, பொறுப்பு அலுவலர்கள் கரோனாநோயாளிகளின் விவரங்களை கண்டறிந்து, சிகிச்சை ஏற்பாடுகள்,ஊரடங்கு கண்காணிப்பு ஆகிய வற்றை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, சேலம் ஆட்சியர் கார்மேகம், கரோனா நிவாரண கட்டளை மைய மாநிலப் பொறுப்பு அலுவலர் மருத்துவர் தரேஷ் அகமது, எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன், மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x