செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள்: ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கிவைத்தார்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 100 ஆக்சிஜன் படுக்கை வசதியை, ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் செல்வகுமார், செங்கல்பட்டு அரசு  மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துகுமரன், இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள் - பொறுப்பு) குருநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 100 ஆக்சிஜன் படுக்கை வசதியை, ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் செல்வகுமார், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துகுமரன், இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள் - பொறுப்பு) குருநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Updated on
1 min read

செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கரோனா பாதித்தவர்களுக்காக கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட வார்டைத் தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அ.ஜான்லூயிஸ் தலைமையில் ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பர சன் கரோனா பாதித்தவர்களுக்கான கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட வார்டைத் தொடங்கி வைத்தார்.

இதேபோல் மதுராந்தகம், செய்யூர் அரசு மருத்துவமனைகள் மற்றும் பவுஞ்சூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மொத்தம் 45 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கொண்ட இடைக்கால கரோனா சிகிச்சை மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் ஏற்கெனவே கரோனாவுக்கு 435 ஆக்சிஜன் படுக்கை வசதி உள்ளது. மேலும் அதை விரிவுபடுத்தி 100 ஆக்சிஜன் படுக்கை வசதி கூடுதலாக தொடங்கப்பட்டுள்ளது.

இதேபோல் மதுராந்தகம், செய்யூர் பவுஞ்சூர் ஆகிய பகுதிகளில் ஆக்சிஜன் படுக்கை வசதி புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த கரோனாவை விரட்ட வேண்டும் என்று அரசு விழிப்புடன் செயல்படுகிறது. தமிழகத்தில் 6,000 செவிலியர்கள், 2,000 மருத்துவர்களை நியமனம்செய்து மருத்துவர், செவிலியர் தட்டுப்பாடு இல்லாத மருத்துவமனைகளாக மாற்ற துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்டஇயக்குநர் செல்வகுமார், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிமுதல்வர் முத்துகுமரன், இணைஇயக்குநர் (சுகாதாரப் பணிகள் -பொறுப்பு) குருநாதன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரியாராஜ், வருவாய் கோட்டாட்சியர்கள் சுரேஷ் (செங்கல்பட்டு), செல்வி லட்சுமிபிரியா (மதுராந்தகம்) மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உடன்இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in