30 நாள் பரோலில் வீடு திரும்பிய பேரறிவாளன் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்

ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று கையெழுத்திட்ட பேரறிவாளன்.
ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று கையெழுத்திட்ட பேரறிவாளன்.
Updated on
1 min read

30 நாள் பரோலில் வீடு திரும்பியுள்ள பேரறிவாளன் ஜோலார் பேட்டை காவல் நிலையத்தில் நேற்று கையெழுத்திட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறி வாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையை கருத்தில்கொண்டு 30 நாட்கள் பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி, சென்னை புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஜோலார் பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்தடைந்தார். அவரது வீட்டில் உறவினர்கள், நண்பர்கள் சந்திப்புக்கு அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது.

மேலும், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட வேண்டும் என்று பரோல் விதிகளில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஜோலார்பேட்டை காவல் நிலையத்துக்கு பாதுகாப்புடன் நேற்று சென்ற பேரறிவாளன் கையெழுத்திட்டுச் சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in