போலி மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மருந்தகங்களில் மாத்திரைகளை வழங்கினால் குண்டர் சட்டம் பாயும்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று போலி மருத்துவர்களை கண்டறிதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சிவன் அருள் தலைமையில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று போலி மருத்துவர்களை கண்டறிதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சிவன் அருள் தலைமையில் நடைபெற்றது.
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டத்தில் போலிமருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மருந்தகங்களில் மருந்து, மாத்திரை வழங்குபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் சிவன் அருள் எச்சரித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் போலி மருத்து வர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை யில் நடைபெற்ற கூட்டத்தில், சார் ஆட்சியர் வந்தனா கர்க், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன் ராஜசேகர், இணை இயக்குநர் (குடும்ப நலம்) மணிமேகலை, துணை இயக்குநர் (சுகாதாரம்) செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் போலி மருத்துவர்கள் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்திட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்படி சுகாதார நிலையங்களின் செயல் பாடு இருக்க வேண்டும். 24 மணி நேரமும் மருத்துவமனைகள் இயங்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஊர் ஊராக சென்று சிகிச்சை அளித்து மருந்து மாத்திரை வழங்கும் போலி மருத்துவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலி மருத்துவர்கள் மருந்து மாத்திரைகளை பரிந்துரை செய்வது சட்டப்படி குற்றமாகும். அந்த மருந்து மாத்திரைகளை வழங்கும் மருந்தகங்களும் இதற்கு உடந்தையாக உள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலி மருத்துவர்கள் பரிந்துரையில் மருந்தகங்களில் மருந்துகளை வழங்குபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட அளவில் மருத்துவத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, மருந்து ஆய்வாளர் களை கொண்ட குழு அமைத்து மாதந்தோறும் அறிக்கை சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த 3 மாதத்துக்குள் போலி மருத்துவர்கள் இல்லாத மாவட்டம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in