Published : 29 May 2021 07:56 PM
Last Updated : 29 May 2021 07:56 PM

ஓசூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

ஓசூர், நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட அபாலா மனநலம் பாதித்த மகளிருக்கான மறுவாழ்வு இல்லத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி இன்று தொடங்கி வைத்தார்.

ஓசூர் - பாகலூர் சாலையில் சமத்துவபுரம் அருகே “அபாலா” என்ற பெயரில் மனநலம் பாதித்த மகளிருக்கான மறுவாழ்வு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த மறுவாழ்வு இல்லத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 19 பேருக்கும், 45 வயதுக்குக் கீழே உள்ளவர்கள் 28 பேருக்கும் மற்றும் மனநலக் காப்பகப் பணியாளர்கள் 16 பேருக்கும் என மொத்தம் 63 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக நடைபெற்ற இந்தச் சிறப்பு முகாமை ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து ஓசூர் தும்மனப்பள்ளி ஊராட்சியில் செயல்பட்டு வரும் ”லிட்டில் ஹார்ட்ஸ்” மனநலக் காப்பகத்தில் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் 20 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 23 பேருக்கும், பணியாளர்கள் 5 பேருக்கும் என மொத்தம் 48 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நல்லூர் ஊராட்சியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் 12 பேருக்கு அபாலா காப்பகம் சார்பில் ரூ.1,300 மதிப்புள்ள துவரம் பருப்பு, எண்ணெய், மஞ்சள் பொடி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன், மாவட்டப் பயிற்சியியல் அலுவலர் மருத்துவர் ராகவேந்திரகுமார், வட்டார மருத்துவ அலுவலர் விவேக், அபாலா காப்பகம் நிறுவனர் கௌதமன், மேக்னம் அரிமா சங்கத் தலைவர் ரவிசங்கர் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x