Published : 29 May 2021 02:45 PM
Last Updated : 29 May 2021 02:45 PM

அதிமுக ஆட்சியில் மதுரையின் 10 தொகுதிகளிலும் பாரபட்சமின்றி வளர்ச்சித் திட்டங்கள்: ஆர்.பி.உதயகுமார்

மதுரை

அதிமுக ஆட்சியில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் கடுகு அளவிலும் கூட பாரபட்சமின்றி வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளோம் என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விளக்கம் அளித்தார்

திருமங்கலம் தொகுதியில் 18 வயது முதல் 44 வது வயது வரை உள்ள நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது திருமங்கலத்தில் உள்ள பி.கே. என் மெட்ரிக்குலேசன் பள்ளியில் போடபட்டுவரும் தடுப்பூசி மையத்தை முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டார்

அதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது :

மக்கள் மத்தியில் தடுப்பூசித் செலுத்திக் கொள்ள நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் தற்பொழுது இரண்டாவது தடுப்பூசி போடுவதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு போதுமான தடுப்பூசியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்

அதேபோல் தடுப்பூசி போடும் மையங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் அதிகமான பணியாளர்களை நியமித்து சமூக இடைவெளியை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களுக்கு தொற்று பரவாமல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்

மதுரை மாநகராட்சி வளர்ச்சிக்காக 250 கோடி நிதியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு நிதியாக வழங்கினார். மதுரை நத்தம் சாலையில் ஆயிரம் கோடியில் பறக்கும் பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாட்சியின் காலத்தில் தான் மதுரை மாவட்டம் திருமங்கலம், திருப்பரங்குன்றம் உள்ளடக்கிய உச்சப்பட்டி தோப்பூரில் 27.1.2019 ஆண்டு 1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பாரத பிரதமர் மூலம் அடிக்கல் நாட்டப்பட்டது இதற்காக அப்போது இருந்த அம்மாவின் அரசு 223 ஏக்கர் நிலங்களை மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது

அதேபோல் தோப்பூர் உச்சப்பட்டி 583 ஏக்கர் பரப்பளவில் 9,557 வீட்டு மனைகள் கொண்ட துணைக்கோள் நகரம் உருவாக்கப்பட்டது. இது மதுரை மக்களின் வளர்ச்சியைக் கொண்ட திருப்பரங்குன்றம் திருமங்கலம் உள்ளடக்கிய தொகுதிகளாகும்

மதுரை மாவட்ட மக்களின் 50 ஆண்டு காலத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு தராத வகையில் மதுரையில் நடைபெற்ற புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி 1,296 கோடி மதிப்பில் முல்லைப்பெரியாறில் இருந்து குமுளி லோயர்கேம்ப் வழியாக குழாய் மூலம் மதுரையில் உள்ள100 வார்டுகளுக்கும் குடிநீர் வழங்கப்படும் என்று அறிவித்து அதனைத் தொடர்ந்து 4.12.2020 ஒன்று மதுரையில் இதற்கான திட்டப் பணிகளை முன்னாள் முதல்வர் அடிக்கல் நாட்டினார்

தற்போது முதல்வர் மதுரையில் உள்ள புதிய ஆட்சியர் கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த கட்டிடம் 33 கோடி செலவில் அதிமுக அரசால் கொண்டுவரப்பட்டது

அதுமட்டுமில்லாது அதிமுக தான் மதுரையில் 1000 கோடி மதிப்பில் ஸ்மார்ட் திட்டப்பணிகள் கொண்டுவரப்பட்டன பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட மதுரையின் மையப்பகுதியில் பல்வேறு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 59 கோடியில் காளவாசல் பகுதியில் உயர்மட்ட மேம்பாலங்கள். வைகை ஆற்றின் குறுக்கே 32 கோடியில் இரண்டு உயர்மட்ட மேம்பாலங்களை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்

அதேபோல் பாண்டிகோவில் ரிங் ரோடு அருகே 50 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பால பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது அதேபோல் மூன்று மாவடியில் இருந்து ஆனையூர் வரை 50 கோடியில் நெடுஞ்சாலைத்துறை மாநகராட்சி சிறப்பு அனுமதி பெற்று இணைப்பு சாலை போடப்பட்டுள்ளது

குறிப்பாக ஸ்மார்ட் திட்டப்பணி மத்திய தொகுதியில் தான் எண்ணற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போல் கிழக்கு தொகுதியில் குடிமராமத்து திட்டப்பணிகள் அதேபோல் கிழக்கு தொகுதி உள்ள விரிவாக்கப்பட்ட மாநகராட்சி வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் லோயர் கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் அதேபோல் கிழக்கு தொகுதியில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிக் கொடுக்கப்பட்டது அதேபோல் கிழக்கு தொகுதியில் தான் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது

இப்படி ஆயிரமாயிரம் பணிகள் பட்டியலிட்டு சொல்ல முடியும் மதுரை உள்ளடக்கிய பத்து தொகுதிகளுக்கும் கடுகளவும் பாரபட்சமின்றி வளர்ச்சித் திட்டங்கள், மேம்பாட்டு திட்டங்களை சாட்சியோடு ஆதாரத்தோடு தற்போது கூறி உள்ளேன்

மதுரை மாவட்டத்தில் அதிமுக ஆட்சியி ன் போது பேரூராட்சிகள், ஊராட்சிகள், ஒன்றியங்கள், நகராட்சிகள், மாநகராட்சிகள், என்று அனைத்து பணிகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைதுறை, மக்கள் நல்வாழ்வு துறை, கூட்டுறவு துறை, வருவாய் துறை உள்ளடிக்கிய பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

10 தொகுதியில் வளர்ச்சிகளை உள்ளடக்கி அனைத்து பணிகளை மேற்கொண்டதை மதுரை மக்கள் அறிந்த காரணத்தினால் தற்போது இருக்கும் ஆளும் கட்சி முன்வைத்த அவதூறுகளையும் குற்றச்சாட்டையும் தாண்டி மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 5 தொகுதிக்கு அதிமுகவுக்கு வெற்றியை வழங்கியுள்ளார்கள்

10 தொகுதிகளில் நான் நடைபயணம் மேற்கொண்ட பொழுது அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் மக்களிடம் மனுக்கள் பெற்று முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் அந்த தொகுதிக்கு சென்று அம்மா அரசில் தான் எங்களால் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் பாரபட்சமில்லாமல் நிதி ஒதுக்கி மக்களின் கோரிக்கை அடிப்படையில் தான் திட்டங்கள் வழங்கப்பட்டது

ஒட்டுமொத்த வளர்ச்சியும் மையமாக வைத்துதான் அனைத்து திட்டங்களை மேற்கொள்ளும் வகையில் மதுரை மக்களுக்காக கோரிக்கைகளை செயல்படுத்தும் வண்ணம் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் கோரிக்கைகளை வைக்கக் கடமைப்பட்டுள்ளேன்

மதுரை மாவட்டத்தில் 420 ஊராட்சிகள் உள்ளன இதில் திருமங்கலம் தொகுதியில் 116 ஊராட்சிகள், 324 வருவாய் கிராமங்கள், இரண்டு பேரூராட்சிகள், நகராட்சிகள் உள்ளடக்கிய மிகப்பெரிய சட்டமன்ற தொகுதி ஆகும் என்பது மதுரை மக்களுக்கு நன்றாக தெரியும் கிராமங்களில் அடிப்படை தேவைகளை மக்களின் கோரிக்கை அடிப்படையில் சாலை வசதி ,குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளை உருவாக்க அரசின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் மேற்கொள்ளப்பட்டது என்பதை நான் மறுப்பது இல்லை மறைக்கவும் இல்லை

ஆனால் பாரபட்சமாக திட்டங்களில் செயல்பட்டதாக பத்திரிகையில் வந்த செய்தி ஆச்சர்யமாக உள்ளது பொதுவாழ்வில் நீண்ட நெடிய அனுபவம் பெற்றரும் அரசியலில் அடிமட்ட நிலையில் இருந்து இன்றைக்கு தன்னுடைய உழைப்பால் உயர்ந்த நிலையில் உயர்ந்து இருப்பவர் வணிக வரி துறை அமைச்சர் குற்றம் சாட்டி இருப்பது திருமங்கலம் தொகுதி மக்களிடத்தில் வேதனை அளிப்பதாக அமைந்திருக்கிறது

ஒரு தொகுதியில் வளர்ச்சி பணிகள், திட்டங்களை கொண்டு வருவதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தேவையை முன்வைத்து கோரிக்கைகளை முன்வைத்து திட்டங்கள் பெறுவதில் செயல்படுத்திக் காட்டி மக்கள் நம்பிக்கை பெறுவதும் தான் சார்ந்துள்ள இயக்கத்தின் செல்வாக்கு வளர்ப்பதும் ஒவ்வொரு மக்கள் பிரதிநிகள் தலையாய கடமையாக காலங்காலமாக இருந்து வருவதை வணிகவரித்துறை அமைச்சர் நன்றாக அறிவார்

மக்கள் சேவையில் நீண்ட அனுபவம் பெற்ற அவர் எதிர்க்கட்சி காலத்தில் அம்மா அரசில் கோரிக்கை வைத்து அதிகமாக திட்டங்களை அம்மா அரசின் மூலமாக கிழக்கு தொகுதிக்கு பெற்றுத்தந்த காரணத்தினால் மதுரை மாவட்டத்தில் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் மக்கள் அளித்த இந்த சான்று திமுக ஆட்சியில் செய்த பணிக்காக அல்ல 5 ஆண்டுகள் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்து அம்மா அரசின் மூலமாக அவர் பெற்றிருக்கின்ற தொகுதியில் வளர்ச்சித் திட்டம் மூலம் இந்த மகத்தான சாதனை படைத்துள்ளார் அமைச்சர் என்பதை அவருக்கு நினைவூட்டுகிறேன்

10 தொகுதிகளுக்கும் பேரிடர் மீட்பு பணிகாலங்களில் நோய் தடுப்பு பணிகள் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் உருவாக்குவதிலும் தடுக்க தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதிலும் நெல் கொள்முதல் நிலையம் அமைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசு அனைத்து மக்களை அரவணைத்து ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாராமல் வளர்ச்சித் திட்டங்களை தந்தார் என்று மக்கள் கருதினார்கள்

அதேபோல தற்போது நாங்களும் மக்கள் கோரிக்கைகளை கொண்டு வருகிறோம் இதை நீங்கள் குறைகள் என்று பார்த்தால் ஆனால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது எங்கள் கடமை மக்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல மக்கள் எங்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளார்கள்

மதுரை மாவட்ட மக்களை பாதுகாக்க தற்போது 20 நாட்கள் நடவடிக்கை வரவேற்கத்தக்கது இருந்தபோதிலும் நாங்கள் முதல் அலையில் மக்களை காத்திட நாங்கள் எடுத்த நடவடிக்கைகளை தாங்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளிட்ட மதுரை மாவட்ட மக்கள் பாராட்டி நினைவு கூறுகிறார்கள் நினைவு கூறுவதை மக்கள் பணிக்கு கவசமாக ஊக்கமாக பரிசாக அமையும் என்பார்கள்

பேரிடர் காலங்களில் மக்களைக் காக்கும் பணிகளுக்கும் ,வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதிலும் உள்ள வேறுபாட்டை அமைச்சர் நன்கு அறிந்தவர் என்ற அடிப்படையில் நான் தரும் விளக்கங்களைஅவர் ஏற்றுக் கொள்வதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x