திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 21-ம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு: வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் தீவிரம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 21-ம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு: வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் தீவிரம்
Updated on
1 min read

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரும் 21-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி (பரமபத வாசல் திறப்பு) நடக்கிறது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.

இதுகுறித்து கோயில் நிர்வாக துணை ஆணையர் பி.கோதண்டராமன், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

சென்னை பார்த்தசாரதி கோயிலில் கடந்த 11-ம் தேதி முதல் பகல்பத்து உற்சவம் தொடங்கி நடந்து வருகிறது. 20-ம் தேதி வரை தினமும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. 21 முதல் 30-ம் தேதி வரையில் இராப்பத்து உற்சவ நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

வைகுண்ட ஏகாதசியான 21-ம் தேதி அதிகாலை 2.30 முதல் நள்ளிரவு 12 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு, அதிகாலை 4.30 மணிக்கு நடக்கிறது. 22 முதல் 29-ம் தேதி வரை தினமும் மாலை 5.45 மணிக்கும், 30-ம் தேதி காலை 9 மணிக்கும் பரமபதவாசல் சேவை நடைபெறும்.

கோயிலுக்கு வரும் பக்தர் களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு லட்டு, கும்குமம், கற்கண்டு, பகவத்கீதை புத்தகம் உள்ளிட்டவை இலவ சமாக வழங்கப்படும். 21-ம் தேதி 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படும். இந்த ஆண்டு முதல்முறையாக மாற்றுத்திற னாளிகள், முதியோர், கர்ப்பிணி களுக்கு தனி வரிசை அனுமதிக்க உள்ளோம்.

கடந்த ஆண்டு சொர்க்கவாசல் திறப்பின்போது ஒன்றரை லட்சம் பக்தர்கள் வந்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கி றோம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். முக்கியமான 34 இடங்க ளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும். நிகழ்ச்சிகளை பக்தர்கள் பார்க்க வசதியாக தேவையான இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்படும். நகரின் பல்வேறு இடங்களில் இருந்து பார்த்தசாரதி கோயிலுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோயில் நிர்வாக உதவி ஆணையர் ஜோதிலட்சுமி மற்றும் போலீஸ் அதிகாரிகள், கோயில் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in