

சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள பெருநிதியை கொண்டு வந்து சேர்க்குமாறு திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
‘கொள்கை காத்திட குவியட் டும் தேர்தல் நிதி’ என்ற தலைப் பில், வரும் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்காக கணிச மான நிதி வழங்குமாறு கடந்த மார்ச் 12-ம் தேதி வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதையேற்று டிசம்பர் 25 வரை ரூ.21 கோடியே 93 லட்சத்து 96 ஆயிரத்து 534 வந்துள்ளது. இதற்காக நானும், பொருளாளரும் பெருமை கொள்கிறோம்.
ஆனால், பெருமை கொள் வதால் மட்டும் வெற்றி கிடைத்து விடாது. சட்டப்பேரவை, நாடாளு மன்றத்தில் திமுகவினர் அதிக அளவில் இடம்பெற வேண்டும். அதற்கேற்ப தொண்டர்களின் பணி அமைய வேண்டும். தேர்தல் பணிகளை சிறப்பாக செய்துவிட்டு தேர்தல் நிதி திரட்டுவதில் மட்டும் அக்கறை காட்டாமல் இருந்துவிடக் கூடாது. இதிலும் தொண்டர்கள் அக்கறை காட்டினால் வரும் தேர்தலில் மகிழத்தக்க வெற்றியை நம் மால் பெற முடியும்.
இதுவரை வந்துள்ள ரூ.22 கோடி, தேர்தலை சந்திக்க போதாது என்பதை அனை வரும் அறிவோம். நீங்கள் தருகிற தேர்தல் நிதி வெள்ளிக் காசாக இருந்தாலும், அதை தங்கக் காசாக கருதி ஏற்றுக் கொள்வேன்.
‘திமுகவை எங்கள் உழைப் பால் கட்டிக் காப்போம், எதிர்ப் பினை நெட்டித் தள்ளுவோம், திராவிட இன உணர்வை வளர்க்க ஒன்றுபட்டு உழைப்போம்’ என தொண்டர்கள் உறுதியேற்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
நான் இவ்வாறு கூறிவிட்ட தால் இதுவரை அளித்த நிதியே போதும் என இருந்து விடக் கூடாது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. ஒவ்வொரு தேர்தலிலும் கேட்ட வுடன் இல்லையென்று மறுக்கா மல் அள்ளிக் கொடுப்பவர்கள் என்னோடு இருக்கிறார்கள் என் பதை அறிவேன். பணக்காரர் களிடமும், பல கோடி வைத் திருப்பவர்களிடமும் தேர்தல் நிதி கேட்டு பழக்கப்பட்டவன் அல்ல நான்.
எனவே, பெருநிதியை கொண்டு வந்து கட்சி நிதி யோடு சேர்க்க வேண்டும். அத் துடன் தேர்தல் பணிகளை மேற் கொள்வதிலும் தொய் வின்றி முனைப்புகாட்ட வேண்டும். வரும் தேர் தலிலும் திமுக பெறும் வெற்றி யின் மூலம் மெய்ப்பித்துக் காட்டுவோம்.