

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை பெசன்ட் நகரில் வசிப்பவர் சாந்தினி(36). நாடோடி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சாந்தினி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
மலேசியாவை சேர்ந்த நான், சென்னையில் உள்ள மலேசியதுணை தூதரகத்தில் சுற்றுலாவளர்ச்சிக் கழகத்தில் பணியாற்றினேன்.
கடந்த 2017-ல் அதிமுக ஆட்சியில் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் நட்பு ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தெரிவித்தார். 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் - மனைவியாக வாழ்ந்தோம்.
முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, என்னை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். அவருடன் இருந்த காலகட்டத்தில் 3 முறை கருவுற்றேன். வலுக்கட்டாயமாக அதைகலைக்கச் செய்தார். தற்போதுஎன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்து மிரட்டுகிறார்.
அவருடன் நான் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூகஊடகங்களில் பரவச் செய்துவிடுவதாக மிரட்டுகிறார்.
5 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு, தற்போது என்னைதிருமணம் செய்ய மறுத்து, கொலை மிரட்டல் விடுக்கும் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் சாந்தினி குறிப்பிட்டுள்ளார்.