திருவண்ணாமலை கோயிலில் அக்னி தோஷ நிவர்த்தி பூஜை

தி.மலை அண்ணாமலையார் கோயி லில் அக்னி தோஷ நிவர்த்தி பூஜை நடைபெற்றது.
தி.மலை அண்ணாமலையார் கோயி லில் அக்னி தோஷ நிவர்த்தி பூஜை நடைபெற்றது.
Updated on
1 min read

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அக்னி தோஷ நிவர்த்தி பூஜை 3 நாட்கள் நடைபெற்றது.

அக்னி நட்சத்திர வெயில் கடந்த4-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதிஅண்ணாமலையார் கோயில்,திருநேர் அண்ணாமலையார் கோயில் மற்றும் திருவண்ணாமலை பெரியாண்டவர் கோயில் உட்பட மாவட்டத்தில் பல ஊர்களில் உள்ள சிவாலயங்களில் தாராபிஷேகம் தொடங்கியது. பல்வேறு மூலிகைகள் மற்றும் புனித நீர் நிரப்பப்பட்ட தாரா பாத்திரத்தில் இருந்து மூலவரை குளிர்விக்கும் வகையில், அவர் மீது நீர்த்துளிகள் விழும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அக்னி நட்சத்திர நிறைவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அக்னி தோஷ நிவர்த்திபரிகால பூஜை, கடந்த 26-ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.

இதையடுத்து, 5 கால யாக பூஜை நடைபெற்று வந்தது. மேலும்,1,008 கலச பூஜையும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நிறைவு நாளான நேற்று 5-ம் கால யாக பூஜை நடைபெற்றது. வேத மந்திரங்களை முழங்கி யாக பூஜையை சிவாச்சாரியார்கள் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in