

கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை தமிழக அரசுகுறைத்துக் கூறுகிறது. பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, 24 மணிநேரத்தில் பரிசோதனை முடிவைவெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, சேலம் மாவட்டம்எடப்பாடி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைகள் குறித்துநேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மருத்துவமனை தலைமை மருத்துவர் சரவணகுமார் உடனிருந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தொற்றுபாதிக்கப்பட்டவர்களால், சேலம்மாவட்ட மருத்துவமனைகளில் 1,153ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பிவிட்டன. சேலம் இரும்பாலையில் ஒரு வாரத்தில் திறக்கப்படும் எனஅறிவிக்கப்பட்ட சிகிச்சை மையம்இதுவரை தொடங்கவில்லை. இதனை விரைவாக திறக்க வேண்டும்.
சேலம் மாவட்டத்தில், கரோனா சிகிச்சை மையங்களில் 3,800 படுக்கைகள்தான் உள்ளன. ஆனால் 11,500 படுக்கைகள் இருப்பதாகஅரசு தவறான புள்ளிவிவரத்தைத் தெரிவிக்கிறது. நான் முதல்வராக இருந்தபோது, தொற்றினைக் கண்டறிய 267 ஆய்வுக்கூடங்கள் செயல்பட்டு, 24 மணி நேரத்தில் முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.ஆனால், இப்போதும் அதேஎண்ணிக்கையில்தான் பரிசோதனைக் கூடங்கள் உள்ளன. பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை தமிழக அரசு குறைத்துக் கூறுகிறது. மயானங்களில் சடலங்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.
தளர்வில்லா ஊரடங்கை அறிவித்ததால், நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு 6 லட்சம் பேர் சென்றனர். இதனால், கிராமங்களில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது.
அதிமுக அரசு, கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக சுகாதாரத் துறை அமைச்சர் கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்தில் உச்சபட்சமாக 6 ஆயிரத்து 900 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். நாங்கள் எடுத்த நடவடிக்கைகளால், கடந்த பிப்ரவரி 26-ம் தேதியன்று, தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 487 நபராகக் குறைந்தது.
எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, ‘கரோனா தடுப்பூசி 100 சதவீதம் வெற்றியானதா’ என சந்தேகம் எழுப்பினார். இப்போது அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என்கிறார். இதே கருத்தினை கடந்த ஆண்டு கூறியிருந்தால், ஏராளமானோர் அன்றைக்கே தடுப்பூசியை போட்டுக் கொண்டிருப்பர்.
இது சோதனையான நேரம். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு மறந்து செயல்பட வேண்டும். 100 நாட்களுக்கு பின்னரே கருத்து சொல்ல வேண்டும் என்று இருந்தேன். எங்களுடைய அரசை குறை சொன்னதால்தான், நாங்கள் கருத்து சொல்ல வேண்டி வந்தது.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பல மாநிலத்தவர் தங்கி பணிபுரிகின்றனர். இங்கு, பரிசோதனைகள் அதிகரித்தால் மட்டுமே தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முடியும்.
கடந்த ஆண்டு தடுப்பூசி இல்லாத நிலையிலும், தொற்றுப் பரவலை அதிமுக அரசு கட்டுக்குள் வைத்திருந்தது. தற்போது அந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். உடனடியாக ஆக்சிஜன்படுக்கைகளை அதிகரிப்பது, கரோனா சிகிச்சை மையங்களைஅதிகரிப்பதுதான் ெதாற்றுக்குதீர்வாக அமையும்’ என்றார்.