பீப் பாடல்: சிம்பு, அனிருத் மீது நீதி விசாரணை செய்ய தமிழருவி மணியன் வலியுறுத்தல்

பீப் பாடல்: சிம்பு, அனிருத் மீது நீதி விசாரணை செய்ய தமிழருவி மணியன் வலியுறுத்தல்
Updated on
1 min read

பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் ‘பீப்’ பாடலைப் பாடிய, இசையமைத்த சிம்பு, அனிருத் இருவர் மீதும் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்த் திரையுலகில் ஒலித்த தெய்வீக மணம் கமழும் பாடல்களும், சமூக சீர்திருத்தப் பாடல்களும், இலக்கியச் செழுமைமிக்க பாடல்களும் உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன. ஆனால், இன்றைக்கு இளந்தலைமுறையை சீரழிக்கும் நோக்கில் தரம் தாழ்ந்த பாடல்கள் மிகுதியாக வருகின்றன. சிம்பு, அனிருத் இருவரும் வெளியிட்டிருக்கும் ’பீப்’ பாடல் அருவருப்பும் ஆபாசமும் கொண்டதாக உள்ளது.

சிம்புவும் அனிருத்தும் பெண்மையை இழிவுபடுத்திய சமூக குற்றத்திற்காக நீதிமன்றத்தில் நிறுத்தி, இருவரையும் நீதி விசாரணை செய்ய வேண்டும்'' என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in