

கடலூரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்காக சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் நேற்று நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.
கடலூர் மாவட்டம் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப் பட்ட மக்களுக்காக சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு மாநில சட்டப்பணி கள் ஆணைக் குழு, தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், இந்தியன் வங்கி ஆகியவை சார்பில் நிவாரணப் பொருட்களை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுதாகர், ஐ.ஏ.எஸ்.அதிகாரியும் கடலூர் மாவட்ட நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் அதிகாரியுமான ககன்தீப்சிங் பேடியிடம் வழங்கினார்.
அதையடுத்து நீதிபதி ஆர்.சுதாகர் நிருபர்களிடம் கூறுகையில், “இந்த நிவா ரணப் பொருட்களில் 300 குடும்பத்தினரின் 15 நாட்கள் தேவையை பூர்த்தி செய்யும். மளிகைப் பொருட்கள், பாய், குடிநீர், மருந்து மாத்திரைகள், பிஸ்கட் பாக்கெட், குடம், வாளி, தட்டு, டம்ளர், 5 கிலோ அரிசி, நாப்கின், சோப்பு, கொசுவத்திச் சுருள், பாத்திரங்கள் உள்ளிட்டவை இடம்பெற் றுள்ளன.
இந்த நிவாரணப் பொருட்கள் கடலூர் மாவட்ட கிராமப்புற மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது” என்றார்.