பஸ் படிக்கட்டு உடைந்து மாணவர்கள் காயம்: ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துக் கழகம் முடிவு

பஸ் படிக்கட்டு உடைந்து மாணவர்கள் காயம்: ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துக் கழகம் முடிவு
Updated on
2 min read

தாம்பரம் அருகே சென்று கொண் டிருந்த மாநகர பஸ்ஸின் படிக்கட்டு திடீரென உடைந்ததால் மாணவர் கள் பலர் காயமடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க போக்கு வரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

சென்னை தாம்பரத்தில் இருந்து தாம்பரம் டவுன், பெருங்களத்தூர், முடிச்சூர், மண்ணிவாக்கம் வழியாக வண்டலூருக்கு (கேட்) மாநகர பஸ் (எண்:55வி) இயக்கப் படுகிறது. நேற்று காலை ஓட்டுநர் வில்பட் சிசில் (45) என்பவர் பஸ்ஸை ஓட்டி வந்தார். காலை நேரம் என்பதால் பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்தது. மாணவர்கள், இளைஞர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

முடிச்சூர் மண்ணிவாக்கம் சாலை மிகவும் மேடு, பள்ளமாக இருந்ததால், மண்ணிவாக்கம் அருகே பஸ் சென்றபோது திடீரென பள்ளத்தில் சத்தத்துடன் இறங்கியது. இதனால், பஸ்ஸின் பின்பகுதி படிக்கட்டு உடைந்து விழுந்தது. படியில் பயணம் செய்த மாணவர்கள், இளைஞர்கள் சுமார் 10 பேர் சாலையில் விழுந்தனர். இதில் சிலருக்கு கை மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டது. பயணிகள் சத்தம் போட்டதால், பஸ்ஸை ஓட்டுநர் நிறுத்தினார். காயமடைந்த மாணவர்களுக்கு அருகில் இருந்த மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப் பட்டது.

இந்த விபத்து குறித்து போலீ ஸார் விசாரணை நடத்தி வருகின் றனர். சாலையில் சென்று கொண் டிருந்த மாநகர பஸ்ஸின் படி திடீரென உடைந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகள் தகவல்

இது தொடர்பாக மாநகர போக்கு வரத்துக் கழக உயர் அதிகாரிக ளிடம் கேட்டபோது, ‘‘மாநகர பஸ் எண்.55 என்ற வழித்தடத்தில் மட்டுமே சுமார் 20-க்கும் மேற்பட்ட பஸ்கள் பாதுகாப்பாக இயக்கப் படுகின்றன. விபத்துக்குள்ளான பஸ்ஸை ஓட்டுநர் கவனக் குறையாக ஓட்டியுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய் துள்ளோம். மேலும், தொடர்ந்து விசாரணை நடத்தவுள்ளோம்’’ என்றனர்.

பராமரிப்பு பணியில் மெத்தனம்

இது தொடர்பாக தொமுச பொரு ளாளர் கி.நடராஜன் கூறும்போது, “தற்போது பெய்த கனமழையால் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து ள்ளன. குறிப்பாக முடிச்சூர், தாம்பரம், மண்ணிவாக்கம் சாலைகள் மோசமான நிலையில் இருக்கின்றன. பஸ்களின் டயர் மறையும் அளவுக்கு பள்ளங்கள் உள்ளன. ஆனால், பயணிகளின் தேவையை கருதி ஓட்டுநர்கள் கடும் சிரமத்துக்கு இடையே பஸ்களை ஓட்டிச் செல்கின்றனர்.

கனமழையால் பஸ்களும் சேதமடைந்துள்ளன. பஸ்களின் பாடி, ஸ்பிரிங்க், டயர் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. போதிய அளவில் உதிரி பாகங்கள் இல்லாததால் பராமரிப்புப் பணிகள் மெத்தனமாக நடக்கின்றன. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மட்டுமே 1,479 பஸ்கள் 6 ஆண்டுகளையும் கடந்து ஓடுகின்றன. நிதிச் சுமையால் தவித்துவரும் போக்குவரத்துக் கழகங்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். டீசல் மீதான வரியை மட்டுமே வசூலிக்கும் மத்திய அரசு, பஸ் போன்ற பொது போக்குவரத்தை வலுப்படுத்த நிதி ஒதுக்காதது ஏன்?” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in