மழை வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு: தேமுதிகவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து - உணவு, உடைகள் வழங்க விஜயகாந்த் வேண்டுகோள்

மழை வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு: தேமுதிகவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து - உணவு, உடைகள் வழங்க விஜயகாந்த் வேண்டுகோள்
Updated on
1 min read

மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதால், தேமுதிக சார்பில் கொண்டாடப்படும் கிறிஸ்து மஸ் பெருவிழா ரத்து செய்யப் படுவதாக விஜயகாந்த் அறிவித் துள்ளார். கிறிஸ்துமஸ் நாளில் ஏழைகளுக்கு உணவு, உடை, இனிப்பு வழங்குமாறு தொண்டர் களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

தன் உயிரை மக்களுக்காக தியாகம் செய்தவர் இயேசு பிரான். அவர் அவதரித்த தினத்தை கிறிஸ் தவர்கள் கிறிஸ்துமஸ் பெருவிழா வாக கொண்டாடுகிறார்கள். சாதி, மதம் என்ற பேதம் இல்லாத நிலையை மக்களிடம் ஏற்படுத்து வதற்காக தேமுதிக சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழா வெகுவிமரிசையாக கொண் டாடப்பட்டு வந்தது.

தற்போது சென்னை உள் ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த சூழ்நிலையில், கிறிஸ்துமஸை விமரிசையாக கொண்டாடுவது சரியாக இருக்காது என்பதை மனதில் கொண்டு, தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடை பெறும் கிறிஸ்துமஸ் பெருவிழா ரத்து செய்யப்படுகிறது.

அதேநேரம், அனைத்து மாவட் டங்களிலும் கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆடம்பரம் இல்லாமல் ஏழை மக்களுக்கு உடைகள், பிரியாணி உணவு, கேக்குகள், இனிப்புகளை வழக்கம்போல வழங்க வேண்டும் என்று நிர்வாகிகள், தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன்.

ரூ.5 கோடிக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கிய தேமுதிக தொண்டர்கள், நிர்வாகி களுக்கும், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு தொண்டாற்றிய இளை ஞர்கள், மாணவர்கள், தன்னார் வலர்கள், தொண்டு நிறுவனத் தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in