486 ஆக்சிஜன் செறிவூட்டிகள்; தமிழ்நாட்டுக்கு நன்கொடையாக வழங்கிய அமெரிக்க - இந்திய நட்புக் கூட்டணி: சீனாவிலிருந்து சென்னை வந்தன

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

அமெரிக்க - இந்திய நட்புக் கூட்டணி, 486 ஆக்சிஜன் செறிவூட்டிகளைத் தமிழ்நாட்டுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 28) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழ்நாடு அரசின் தொழில் துறை மூலம், அமெரிக்க இந்திய தொழில் உத்தி கூட்டாண்மை மன்றத்தைச் (US-India Strategic Partnership Forum) சார்ந்த அமைப்பான, அமெரிக்க - இந்திய நட்புக் கூட்டணி (US–India Friendship Alliance), 486 ஆக்சிஜன் செறிவூட்டிகளைத் தமிழ்நாட்டுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

சீனாவில் உள்ள ஃபோஷன் (Foshan) நகரிலிருந்து, வான்வழியாகப் புதுடெல்லிக்குக் கொண்டுவரப்பட்டு, பின்னர் சரக்கு விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு தலா 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இன்று அனுப்பி வைக்கப்பட்டன. மீதமுள்ள 336 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள், மேற்கூறிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கோவிட் நிவாரண மையங்களில் பயன்படுத்தப்படும்.

அமெரிக்க இந்திய தொழில் உத்தி கூட்டாண்மை மன்றத்தின் இந்த உதவிக்கு, தமிழ்நாடு அரசு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in