

திருச்சி மாவட்ட ‘டாஸ்மாக் பார்’ மற்றும் மணல் குவாரி சம்பந்தப்பட்ட வருமானங்கள் முந்தைய திமுக ஆட்சியில் கே.என்.நேருவின் தம்பி ராஜஜெயத்தின் வசம் ஒப்படைக்கப்படும். அதிலிருந்து திமுக நிர்வாகிகளுக்கு மாதா மாதம் ‘மாதச் சம்பளம்’ என்ற பெயரில் மஞ்சள் கவரில் வைத்து பணம் கொடுப்பார் ராமஜெயம். ஆட்சி மாறியதும் இந்த வருமானம் அதிமுக மாவட்டச் செயலாளர் குமாரின் கைக்குப் போனது. கடந்த மாதம் வரைக்கும் குமார் தான் ‘பார்’ கணக்கு வாங்கி இருக்கிறார். இந்த நிலையில், இனிமேல் ‘டாஸ்மாக் பார்’ வருமானத்தை யாரிடம் கொடுப்பது என்பதில் சிக்கல் நீடிக்கிறதாம். இப்போது நேரு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இல்லாததால் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியிடம் தான் இந்த வரவு செலவுகள் போகும் என்கிறார்கள். இதற்கிடையே, ‘டாஸ்மாக் பார்’ நடத்தும் முக்கிய நபர்கள் சிலரை நேரு அழைத்துப் பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள். பத்து வருடமாக நின்றுபோன ‘மாசச் சம்பளம்’ எப்ப வரும்?” என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் திருச்சி திமுக நிர்வாகிகள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்