

சிம்புவின் பீப் பாடல் போலவே பெண்களை ஆபாசமாக கொச்சைப்படுத்தும் சினிமா பாடல்களுக்கு எதிராக போலீ ஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற மூத்த பெண் வழக்கறிஞர் பாலாம் பாள், சிம்புவின் பீப் பாடல் போலவே பெண்களை ஆபாச மாக கொச்சைப்படுத்தும் சினிமா, டிவி சேனல்கள், சினிமா பாடல்கள், அதை உருவாக்கிய வர்கள், காட்சிப்படுத்தியவர் களுக்கு எதிராகவும் போலீஸார் வழக்குப் பதிந்து நடவடிக்கை வேண்டும் எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கள் கே.கல்யாணசுந்தரம், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கள் தங்களது உத்தரவில், அரசுக்கு கோரிக்கை மனுவை அனுப்பி வைத்துவிட்டு, அதே வேகத்தில் உரிய அவகாசம் தராமல் உடனடியாக உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக்கூறி தள்ளுபடி செய்தனர்.