Published : 28 May 2021 06:42 AM
Last Updated : 28 May 2021 06:42 AM

காய்கறி மூட்டைக்குள் மதுபானம் கடத்திய 3 பேர் கைது

பெங்களூருவில் இலிருந்து கடத்தி வரப்பட்ட மதுப்பாட்டில்கள் வேப்பூர் அருகே பறிமுதல் செய்யப்பட்டன.

விருத்தாசலம்

வேப்பூர் அருகே காய்கறி மூட்டைக்குள் மதுபானம் கடத்திய 3 பேரை டெல்டா பிரிவு போலீஸார் பிடித்தனர்.

கடலூர் மாவட்ட டெல்டா பிரிவு நடராஜனுக்கு பெங்களூரிலிருந்து சரக்கு லாரியில் கடலூர் மாவட்டம் வழியாக மதுபானம் கடத்தி செல்லப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினர் நேற்று முன்தினம் இரவு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, வெங்காயம் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியை மறித்து சோதனையிட்டனர்.

தொடர் சோதனையில் மூட்டைகளுக்கு நடுவே 18 அட்டைப் பெட்டிகளில் 180 மி.லி கொள்ளளவு கொண்ட 864 மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மதுபாட்டில்கள், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார் அவர்களை வேப்பூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வேப்பூர் போலீஸார் கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுஉச்சிமேடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (43), துரை (38), உதயகுமார் (29) ஆகியோரை கைது செய்தனர்.

தொடர் விசாரணையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இலிருந்து வெங்காயம் ஏற்றி வரும்போது அங்குள்ள மதுபானக் கடையில் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு கும்ப கோணத்திற்கு எடுத்துச் சென்றதும், தமிழகத்தில் பொதுமுடக்கம் காரணமாக மதுபானங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வரப்பட்டதும் தெரியவந்தது.

புவனகிரியில் சாராயம் கடத்திய 2 பேர் கைது

புவனகிரி பங்களா பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி யுள்ளனர். ஆனால் வாகனத்தை ஓட்டி வந்தவர் பின்னால் அமர்ந்திருந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டு வாகனத்தை வேகமாக ஓட்டிச் செல்ல முயன்றார்.

அருகில் இருந்த போலீஸார் அவரை பிடித்தனர்.விசாரணையில் சிதம்பரம் வட்டம் அம்பேத்கர் நகர் பிரேம் குமார்( 22), பின்னால் அமர்ந்திருந்த பெண் அண்ணாநகர் செல்வகுமார் மனைவி பிரமிளா (27) என்றும் தெரியவந்தது.

இருசக்கர வாகனத்தில் அரிசி எடுத்து வருவது போல மூட்டையில், 730 பாக்கெட்டுகளில் 25 லிட்டர் சாராயத்தை புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர். சாராய மூட்டை, இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x