Published : 27 May 2021 02:40 PM
Last Updated : 27 May 2021 02:40 PM

மதுரையில் பாரபட்சம் இன்றி அனைத்துத் தொகுதிகளிலும் தடுப்பூசி; நோய்த் தடுப்பு நடவடிக்கை: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆட்சியரிடம் மனு

மதுரை 

மதுரை மாவட்டத்தில் பாரபட்சம் இல்லாமல் அனைத்துத் தொகுதிகளிலும் தடுப்பூசி மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும்.ஒ பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனையின்படி முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், செல்லூர் கே ராஜூ, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப. ரவிந்திரநாத்குமார் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மாவட்ட ஆட்சியரிடம் கூறியதாவது:

மதுரை மாவட்டத்தில் இறப்பு விகிதம் கூடுதலாக உள்ளது கிராமப்புறங்களில் நோய்ப் பரவல் அதிகரித்து வருகிறது இதை சரிசெய்ய காய்ச்சல் முகாம் நடத்திட வேண்டும் தற்போது மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, மதுரை மேற்கு, மேலூர் ஆகிய 5 தொகுதிகளுக்கு பாரபட்சம் பார்க்கப்படுகிறது அதேபோல் நோய்த் தடுப்பு நடவடிக்கையிலும் பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறது. இதில் பாரபட்சம் இல்லாமல் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

கிராமப்புறங்களில் அம்மா கிளினிக் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது தற்போது மருத்துவர்களின் பற்றாக்குறையை காரணம் காட்டி மூடப்பட்டு உள்ளது அதை மீண்டும் திறக்க வேண்டும்

அதேபோல் வைகை அணையில் நீர்மட்டம் தற்போது 67அடி வரை உயர்ந்து உள்ளது ஆகவே உசிலம்பட்டி பகுதியில் உள்ள 58 கால்வாயில் தண்ணீர் திறந்திட வேண்டும்.

இதன் மூலம் 2 ,285 ஏக்கர் நிலங்களில் வேளாண்மை பணிகளும் குடிநீர் ஆதாரமும் பெருகும் என்று பல்வேறு வேண்டுகோளை மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறினார்

அதனைத் தொடர்ந்து அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர்யிடத்தில் கூறியதாவது

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டலின் படி கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டோம்

இன்றைக்கு இரவு பகல் பாராது தியாக உணர்வுடன் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி வரும் முன் களப்பணியாளர்கள் அனைவருக்கும் வணக்கத்தையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மதுரை மாவட்டத்தில் கரோனா அசுர வேகத்துடன் பரவி வருகிறது நேற்று1,538 நபர்கள் பாதிப்படைந்துள்ளனர் மதுரை மாவட்டத்தில் 15 பேர் பலியாகி உள்ளனர் தென் மாவட்டத்தை சேர்ந்த 6 மாவட்டங்களில் 52 பேர் பலியாகி உள்ளனர் மதுரை மாவட்டத்தில் மே 7-ஆம் தேதி முதல் நோய்த்தொற்று நாள்தோறும் 1000 எண்ணிக்கையைத் தாண்டி வருகிறது இது மதுரை மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்பட்டுள்ளது

குறிப்பாக நோய்த்தொற்று அடையாளம் தெரியாமலே கிராம மக்கள் பலர் உயிர் பலி ஆகி வருகின்றனர் மக்களின் உயிரைக் காத்திட நோய்த்தடுப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும்

புதிய அரசு ஆட்சிக்கு வந்து 20 நாள் ஆகிறது என்றாலும் கூட எதிர்க்கட்சியாக இருந்து பணியாற்றிய அந்த அனுபவம் அவர்களுக்கு உள்ளது மேலும் சனி ஞாயிறு ஆகிய நாட்களில் அதிக அளவில் கூடிய கூட்டங்கள் கூடியது அதன் பாதிப்பு ஒரு வாரம் கழித்துதான் அறியமுடியும்

மதுரை மாவட்டத்தில் 5 தொகுதியில் பாரபட்சம் பார்க்கப்பட்டு வருகிறது ஆகவே அனைத்து தொகுதிகளிலும் தடுப்பூசி மருந்துகள் ஆம்புலன்ஸ் வசதிகள் ஆக்சிஜன் வசதிகள் ஆகியவற்றை செய்திட வேண்டும்.

அதேபோல் கிராமம் தோறும் காய்ச்சல் முகாமை நடத்திட வேண்டும் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக டாக்டர் பற்றாக்குறை காட்டி மூடப்பட்டுள்ள அம்மா கிளினிக்கை மீண்டும் திறக்க வேண்டும்

முதல் அலையில் அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட்டது அதில் உயிர் பலி அதிகமாகவில்லை இல்லை தேவையான மருத்துவர்கள் உயிர்காக்கும் மருந்து மாத்திரைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன

மேலும் முதல் அலையின் போது நோயைக் கட்டுப்படுத்தி மதுரையில் புதிய மாவட்ட ஆட்சி அலுவகம் திறந்து வைத்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மக்களுக்கு முன்னாள் முதலமைச்சர் வழங்கினார்

ஆகவே மதுரை மாவட்ட நிர்வாகம் எங்கள் வேண்டுகோளை ஏற்று நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x