

சென்னையில் இருந்து வரும் 25-ம் தேதி தொடங்கும் மது விலக்கு நடைபயணம் கன்னியா குமரி யில் பிப்ரவரி 12-ல் நிறை வடையும். நடைபயணத்தில் இளைஞர்களும் பங்கேற்க வேண்டும் என தமிழக காந்தி பேரவையின் தலைவரான குமரி அனந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக குமரி அனந்தன் கூறியதாவது:
அகில இந்திய மதுவிலக்கு பேரவை சார்பில் ராஜாஜி பிறந்த நாளான டிசம்பர் 10-ம் தேதி சென்னையில் இருந்து கன்னியா குமரி வரை மதுவிலக்கு நடை பயணம் செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பாராத மழை, வெள்ளத்தால் அது ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது ராஜாஜியின் நினைவு தினத் தன்று (டிசம்பர் 25) நடை பய ணத்தை தொடங்கவுள்ளோம்.
இந்த நடைபயணத்துக்கு ஆதரவு தரக்கோரி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். எல்லா தலைவர்களும் அரசி யல் பேதமின்றி ஆதரவு தெரி வித்துள்ளனர். 2016, ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து பிஹாரில் மது விலக்கை அமல்படுத்துவேன் என அந்த மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். எனவே அவரை இந்த நடை பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்க வைக்க அகில இந்திய மதுவிலக்கு பேரவைத் தலைவர் ரஜினீஸ்குமார் முயற்சி எடுத்து வருகிறார்.
டிசம்பர் 25 அன்று சென்னை பாரிமுனை ராஜாஜி சிலையில் இருந்து காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த நடை பயணத்தை முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் ‘நமது இலக்கு மதுவிலக்கு’ என்ற வாசகத்துடன் காந்திஜி படம் அச் சிடப்பட்ட கொடியை எடுத்துக் கொடுத்து தொடங்கிவைப்பர். இந்த நடைபயணம், காந்திஜி யின் அஸ்தி கரைக்கப்பட்ட தினமான பிப்ரவரி 12-ம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நிறைவடையும்.
இது எனது 11-வது நடை பயணமாகும். இந்த நடைபய ணத்தில் பங்கேற்கும் இளைஞர் களுக்கு அகில இந்திய அளவி லான நற்சான்றிதழ்கள் வழங்கப் படும். அத்துடன் நடைபயணத் தின்போது தங்குமிடம், உணவு போன்றவையும் அகில இந்திய மதுவிலக்கு பேரவை மற்றும் மது வுக்கு எதிரான தன்னார்வ அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்படும்.
எனவே என்னுடன் இந்த நடை பயணத்தில் பங்கேற்க விரும்பு பவர்கள் 93821-55772 என்ற எண் ணில் தொடர்பு கொள்ளலாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.