

அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை இல்லை என்றாலும் கரோனா நோயாளிகளுக்கு தனி யார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி வலியுறுத்தினார்.
கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலை மையில் நடைபெற்றது.
கம்பம், போடி, ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் எம்எல்ஏக்கள் என்.ராமகிருஷ்ணன், ஓ.பன்னீர் செல்வம், மகாராஜன், சரவணக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி தடுப்புப் பணிகள் குறித்து விளக்கினார். எம்எல்ஏக்கள், மருத்துவ அதிகாரிகள் கரோனா தடுப்பு குறித்த தங்களின் ஆலோசனைகளை தெரிவித்தனர்.
பின்னர், அமைச்சர் இ.பெரிய சாமி கூறியதாவது:
அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கரோனா சிகிச்சையில் இருப்ப வர்கள் குணமடைந்தாலும், ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்த பிறகே வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். தேனி மாவட்டத்தில் கருப்புபூஞ்சை நோயால் யாரும் பாதிக்கவில்லை.
முதல்வரின் துரித நடவடிக்கை யால் தமிழகத்தில் 30 சதவீதமாக இருந்த நோய்த்தொற்று 20 சதவீதமாகக் குறைந்துள்ளது. அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை இல்லை என்றாலும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிகிச்சை பெறுபவரின் குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர் பின்னர் மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்று வழங்கினால் போதுமானது. தனியார் மருத்துவமனைக்கு அரசால் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. எனவே சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண் தேஜஸ்வி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், பெரியகுளம் சார் ஆட்சியர் சினேகா, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) யுரேகா உட்பட பலர் கலந்துகொண்டனர்.