

வெள்ள நிவாரணத்துக்கு அரசு ஊழியர்களின் ஒருநாள் ஊதி யத்தை பெறுவதை நிதித்துறை எளிமைப்படுத்தி புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்வது தொடர்பாக நிதித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை குறைத்து, எளிமைப்படுத்தி புதிய அரசாணையை நேற்று நிதித்துறை பிறப்பித்துள்ளது. இதன்படி, ஊழியரிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் ஊதியத்தை நேரடியாக, கருவூல அதிகாரியே முதல்வர் தனிப்பிரிவுக்கான வங்கிக்கணக்கில் செலுத்தி விடலாம். இறுதியாக ஊதியத்தை வழங்கியவரின் பட்டியலை நிதித்துறைக்கு அனுப்ப வேண்டும் என புதிய அரசாணையில் கூறப்பட்டுள்ளது.